Published : 17 Sep 2023 05:08 AM
Last Updated : 17 Sep 2023 05:08 AM

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீட்டை வென்றெடுத்து கொடுக்காமல் ஓயமாட்டேன்: தொண்டர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீட்டை வென்றெடுத்து கொடுக்காமல் ஓயமாட்டேன் என்று பாமகநிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள் ளார்.

இதுதொடர்பாக தொண்டர்களுக்கு நேற்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 1980-ம் ஆண்டில் சமூக நீதி போராட்டத்தை முன்னெடுத்தேன். பலகட்டப் போராட்டங்களை நடத்தியும் நமதுஉரிமைக்குரலுக்கு அரசு செவிசாய்க்காத நிலையில் தான், 1987-ம்ஆண்டு பெரியாரின் பிறந்தநாளான செப்.17-ம் தேதி தொடங்கிஒரு வாரத்துக்கு தொடர் சாலைமறியல் போராட்டத்தை அறிவித்திருந் தோம்.

21 பேர் உயிர் தியாகம்: அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டிலும், மிகக் கொடிய தாக்குதல்களிலும் நமது பாட்டாளி சொந்தங்கள் 21 பேர் விலைமதிப்பற்ற இன்னுயிரை தியாகம் செய்தனர். அவர்கள் செய்த ஈகத்தின் பயனாகத்தான் 1989-ம் ஆண்டு வன்னியர்கள் உள்ளிட்ட 108 சாதிகளை இணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு என்ற புதிய பிரிவை உருவாக்கி அதற்கு 20 சதவீத இடஒதுக்கீட்டை அப்போதைய முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

ஆனால், போராடிப் பெற்ற அந்தஇடஒதுக்கீட்டின் பயன்கள் போராடிய சமுதாயத்துக்கே கிடைக்காததைத் தொடர்ந்துதான் மீண்டும் ஓர் இடஒதுக்கீட்டுப் போராட்டத்தை நடத்தி, முதல்வராக இருந்த பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5சதவீத இடஒதுக்கீட்டை வென்றெ டுத்தோம்.

வன்னியர்களுக்கான 10.5 சதவீதஇடஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நாளிலேயே, எப்பாடு பட்டாவது வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை மீண்டும் வென்றெடுத்துக் கொடுக்காமல் ஓயமாட்டேன் என்றுஉறுதியளித்தேன். அதை நிறைவேற்றுவதற்காகத்தான் கடந்த 20 மாதங்களாக இடைவிடாமல் போராடிக் கொண்டிருக்கிறேன்.

நான் அளிக்கும் வாக்குறுதி: வன்னியர் இடஒதுக்கீட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அனைவருக்கும் நான் மீண்டும், மீண்டும் அளிக்கும் வாக்குறுதி ஒன்றுதான். பாட்டாளி மக்களான வன்னியர்களுக்கு இடஒதுக்கீட்டை வென்றெடுத்து கொடுக்காமல் ஓயமாட் டேன் என்பதுதான்.

வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை எவ்வாறு வென்றெடுக்க வேண்டும் என்பதை நான் அறிவேன். இந்த உண்மை அனைவருக்கும் தெரியும். வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை நாம் வென்றெடுத்தே தீருவோம். இது உறுதி. இந்தஉணர்வுடன் நமது சமூகநீதி நாளான செப்.17-ம் நாளில் இடஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகளின் நினைவுத்தூண்களுக்கும், உருவப்படங் களுக்கும் மலர்தூவியும், மாலைஅணிவித்தும் மரியாதை செலுத்தவேண்டும். அனைவரும் அவர்களின் வீட்டு முன்பு இடஒதுக்கீட்டு போராட்டத் தியாகிகளுக்கு வீரவணக்கம் என்ற பதாகையை அமைத்து மரியாதை செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x