Published : 12 Sep 2023 09:24 AM
Last Updated : 12 Sep 2023 09:24 AM

முழுமையாக பயன்பாட்டுக்கு வராத தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள்: சிரமத்துக்குள்ளாகும் பயணிகள்

சென்னை: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் முக்கிய ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் படிப்படியாக நிறுவப்பட்டு வருகின்றன.

தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், கிண்டி, தாம்பரம், ஆவடி, பெரம்பூர், அம்பத்தூர் உட்பட பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களில் 120-க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இருப்பினும், சில இடங்களில் ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்கும் இயந்தி ரங்கள் காட்சிப் பொருளாகவே இருக்கின்றன. இவற்றை பயன்பாட்டுக்குக் கொண்டுவராததால், பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தாம்பரம், மாம்பலம் உள்ளிட்ட பல ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, "ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் வாயிலாக டிக்கெட் எடுக்கும் வசதி படிப்படியாக விரிவுபடுத்தப்படுகிறது.

சில இடங்களில் ஆட்கள் நியமனம் செய்யாததால், இயந்திரங்கள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து டிக்கெட் இயந்திரங்களும் முழுமையாகப் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப் படும்'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x