Published : 26 Aug 2023 06:21 AM
Last Updated : 26 Aug 2023 06:21 AM

சென்னை கத்தீட்ரல் சாலையில் ரூ.25 கோடியில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா: ஆலோசகரை தேர்வு செய்ய ஒப்பந்தம் கோரியது அரசு

சென்னை: சென்னை கத்தீட்ரல் சாலையில் ரூ.25 கோடியில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைப்பதற்கான ஆலோசகரைத் தேர்வு செய்வதற்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை கத்தீட்ரல் சாலையில் அரசு தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமாக 23 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் கடந்த 1910-ல் தோட்டக்கலை சங்கத்துக்கு வழங்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில், இந்த நிலம் தனியார் ஆக்கிரமிப்புக்கு மாறியது.

கடந்த 1989-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி, 17 ஏக்கர் நிலத்தை மீட்டார். இதையடுத்து, அப்பகுதியில் செம்மொழிப் பூங்கா கடந்த 2009-ல் உருவாக்கப்பட்டது.

மீதமுள்ள நிலம் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் இருந்தது. இந்நிலையில், திமுக ஆட்சி ஏற்பட்ட பின்னர், மீதமுள்ள 6 ஏக்கர் நிலம் கடந்த ஜூன் மாதம் மீட்கப்பட்டது.

இந்நிலையில், கத்தீட்ரல் சாலையில் உள்ள செங்காந்தள் பூங்கா அருகில் உள்ள 6.09 ஏக்கர் நிலத்தில், ரூ.25 கோடியில் கலைஞர் நூற்றாண்டுப் பூங்கா அமைக்கப்படும் என கடந்த ஆக.15-ம் தேதி சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், இந்த பூங்காவுக்கான ஆலோசகர்களை தேர்வு செய்வதற்கான ஒப்பந்தத்தை தமிழக அரசு கோரியுள்ளது. செப்.18-ம் தேதி ஒப்பந்தத்துக்கான கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x