Published : 03 Aug 2023 04:03 AM
Last Updated : 03 Aug 2023 04:03 AM

40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணிக்கு வெற்றி உறுதி: அண்ணாமலை கருத்து

காரைக்குடி: மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணிக்கு மக்கள் வெற்றியை தருவர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தை நேற்று முன்தினம் இரவில் மேற்கொண்டார். கோவி லூரில் இருந்து நடைபயணத்தை தொடங்கிய அண்ணாமலை, பழைய பேருந்து நிலையம், ஐந்து விளக்கு, பெரியார் சிலை வழியாக நூறடி சாலையை அடைந்தார்.

பின்னர், அவர் பேசியதாவது: மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணிக்கு மக்கள் வெற்றியை தருவர். அதிகமாக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஒருவரது தலையில் ரூ.3.52 லட்சம் கடன் உள்ள நிலையில், ஒரு குடும்பத்துக்கு ரூ.1,000 வழங்க உள்ளனர். மதுக்கடைகள் மூலம் மறைமுகமாக திமுகவினர் ஆண் டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கொள்ளை அடிக்கின்றனர்.

அதி கமாக பேசி வந்த அமைச்சர் பொன்முடி, அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு வாயை திறப்பதே இல்லை. புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் நலனுக்காக காவேரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். நடை பயணத்தின் போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற கோபம் பெண்களிடம் உள்ளதை அறிய முடிகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

ராணுவ வீரருக்கு ஆறுதல்: காரைக்குடி பழனிச்சாமி நகர் 2-வது வீதியில் வசித்து வரும் முன்னாள் ராணுவ வீரர் பிரபாகரன் (39). அவருக்கு பணியின்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு, இடுப்புக்கு கீழே உள்ள பகுதி செயலிழந்தது. அவரை நேற்று காலை அண்ணாமலை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவரது குழந்தைகள் வழங்கிய திருக்குறள் புத்தகத்தை பெற்றுக் கொண்டார். மேலும் உதவி தேவைப்பட்டால் தன்னை தொடர்பு கொள்ளுமாறு அண்ணாமலை கேட்டுக் கொண்டார்.

நடைபயணத்தின் போது அண்ணாமலை முன்னிலையில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் உட்பட 12 பேர் பாஜகவில் இணைந்தனர். பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தியநாதன், மாநில இளைஞரணி துணைத் தலைவர் பாண்டித் துரை, முன்னாள் எம்எல்ஏ சோழன் சித.பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x