Published : 04 Jul 2023 06:04 AM
Last Updated : 04 Jul 2023 06:04 AM
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கட்சி பணியிலும், அரசு பணியிலும் தீவிரமாக பணியாற்றி வருகிறார். இதனால், ஏற்படும் உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுகிறார். மேலும் அவ்வப்போது வழக்கமான மருத்துவ பரிசோதனைகளையும் செய்து வருகிறார்.
இன்று வீடு திரும்புவார்: இந்நிலையில், நேற்று மாலை சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். அவ ருக்கு மருத்துவபரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுதொடர்பாக மருத்துவமனை மருத்துவ சேவைகள் இயக்குநர் ஆர்.கே.வெங்கடாசலம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்கான அனுமதிக்கப்பட்டுள்ளார். நாளை (இன்று) அவர் மருத்துவமனையில் இருந்து வீடுதிரும்புவார்” என்று தெரிவித்துள் ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT