Published : 29 Jun 2023 06:06 AM
Last Updated : 29 Jun 2023 06:06 AM
சென்னை: சென்னை சென்ட்ரல்-கூடூர் மார்க்கத்தில், சூலூர்பேட்டை ரயில்வே பணிமனையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
மூர்மார்க்கெட் வளாகம்-சூலூர்பேட்டைக்கு இன்று (ஜூன்29) காலை 10.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், எளவூர்-சூலூர்பேட்டை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
சென்னை கடற்கரை-சூலூர்பேட்டைக்கு இன்று நண்பகல் 12.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் வளாகத்துக்கு இன்றுமுற்பகல் 11.45 மணிக்குப் புறப்பட வேண்டிய மின்சார ரயில்,சூலூர்பேட்டை-எளவூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் வாளகத்துக்கு இன்றுமதியம் 1.20 மணிக்குப் புறப்பட வேண்டிய மின்சார ரயில், சூலூர்பேட்டை - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது என்று சென்னைரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT