Published : 22 Jun 2023 06:07 AM
Last Updated : 22 Jun 2023 06:07 AM
கடலூர்: மனதை ஒருமுகப்படுத்த, மகிழ்ச்சியாக வைக்க, நோயின்றி வாழ யோக கலை உதவுகிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
உலக யோகா தினத்தையொட்டிசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த யோகா பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:
யோகாவின் பிறப்பிடம் சிதம்பரம்: சிதம்பரம், ஆதியோகி நடராஜரின் இருப்பிடம்; ஆன்மிகத்தின் இருப்பிடம். யோக ரிஷி பதஞ்சலி, திருமூலர் ஆகியோர் வழிபட்ட இடம் இது. தமிழகத்தில் குறிப்பாக சிதம்பரம், யோகாவின் பிறப்பிடமாக உள்ளது. அதனை நாம் உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு உள்ளது. இன்றைய வாழ்க்கை முறை காரணமாக அதிகமாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நாடாக நம் நாடு உள்ளது. நமது வாழ்க்கை முறையை யோகா பயிற்சி கொண்டு மாற்றும்போது சர்க்கரை நோய் இல்லாமல் வாழ முடியும் என்றார்.
தொடர்ந்து மாலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி வடலூருக்கு சென்று, வள்ளலார் பிறந்த மருதூர், அவர் சித்தி அடைந்த மேட்டுக்குப்பம் மற்றும் சத்தியஞான சபையை பார்வையிட்டு, அங்கு தனது மனைவியுடன் வழிபாடு நடத்தினார். வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திரு அருட்பிரகாச வள்ளலார் 200-வது ஜெயந்தி விழா குழுவினர் நடத்திய ஜெயந்தி விழாவில் பங்கேற்றார்.
சனாதன வள்ளலார்: அப்போது பேசிய ஆளுநர், “உலகின் மிகப்பெரும் ஞானியான வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான், பல ரிஷிகளின் நூல்களைப் படித்தவன். அப்போது வள்ளலாரின் நூல்களையும் படித்த போது, அது மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்தியது.
பத்தாயிரம் வருடங்கள் கொண்ட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். அறியாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாக சனாதன தர்மத்தை சிலர் தவறாக நினைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT