Last Updated : 05 Jul, 2022 10:10 AM

 

Published : 05 Jul 2022 10:10 AM
Last Updated : 05 Jul 2022 10:10 AM

சேதி தெரியுமா?

ஜூன் 24: தேசியப் புலனாய்வு முகமையின் (என்.ஐ.ஏ.) தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி தினகர் குப்தாவை மத்திய அரசு நியமித்தது.

ஜூன் 25: 2023ஆம் ஆண்டு ஜி20 மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்துகிறது. இந்த மாநாடு ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 25: தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் மாலன் எழுதிய ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக்குறிப்புகள்’ என்கிற நூல் சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருதுக்குத் தேர்வானது.

ஜூன் 26: நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரியாக பரமேஸ்வரன் நியமிக்கப்பட்டார்.

ஜூன் 27: பெங்களூருவில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் 41 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியை வீழ்த்தி முதன் முறையாக மத்தியப் பிரதேச அணி சாம்பியன் ஆனது.

ஜூன் 29: ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்கு ஜூலை 1 முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்தது.

ஜூன் 30: பின்லாந்தில் நடைபெற்ற பவோ நூர்மி விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.30 மீ. தொலைவுக்கு ஈட்டி எறிந்து, தன்னுடைய முந்தைய சாதனையை முறியடித்துத் தங்கப் பதக்கம் வென்றார்.

ஜூன் 30: ஆஸ்கர் விருதில் கலை, அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர் என்கிற பெருமையை நடிகர் சூர்யா பெற்றார்.

ஜூலை 1: பொறுப்பற்ற பேச்சுக்காக நுபுர் சர்மா தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x