Published : 01 Jun 2022 03:12 PM
Last Updated : 01 Jun 2022 03:12 PM

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு - பகுதி 14

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு, பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்துவரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா - விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த திங்கள்கிழமை (மே 30) அன்று பகுதி - 13இல் ‘பொது 3’ என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்களை வெளியிட்டிருந்தோம். இன்று ‘பொது-4’ (இயற்பியல் - 1) என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்கள் இடம்பெறுகின்றன.

‘பொது-4’ (இயற்பியல் - 1)

1. கீழ்க்கண்டவற்றுள் தனிச்சுழி வெப்பநிலை யாது?
அ. 0°C ஆ. 273°C
இ. - 273°C ஈ. 37°C

2. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
அ. வெப்பநிலை - கெல்வின்
ஆ. மின்னோட்டம் - ஆம்பியர்
இ. திண்மக்கோணம் - ரேடியன்
ஈ. ஒலிச்செறிவு - கேன்டிலா

3. S.I. அலகு முறையில் பொருளின் அளவு எந்த அலகால் அளக்கப்படுகிறது?
அ. அணு ஆ. நியூட்டன்
இ. கிராம் ஈ. மோல்

4. ஹெர்ட்ஸ் என்பது எதன் அலகு?
அ. அடர்த்தி ஆ. அதிர்வெண்
இ. அழுத்தம் ஈ. உந்தம்

5. ஒரு பார்செக் என்பது எத்தனை ஒளி வருடங்கள்?
அ. 3.26 ஆ. 3.62
இ. 6.32 ஈ. 2. 36

6. சீசியம் அணுவின் சீரான அதிர்வுகளைக் கொண்டு இயங்கும் கடிகாரம் எது?
அ. ஊசல் கடிகாரம்
ஆ. மணல் கடிகாரம்
இ. சூரிய கடிகாரம்
ஈ. அணுக் கடிகாரம்

7. சூரியனின் வெப்பநிலையை அளக்கப் பயன்படும் கருவி எது?
அ. பைரோமீட்டர்
ஆ. பைரோஹீலியோ மீட்டர்
இ. பாதரச வெப்பமானி
ஈ. SIX வெப்பமானி

8. பாதரசத்தின் கொதிநிலை மற்றும் உறைநிலை யாது?
அ. 375°C , - 39°C
ஆ. 200°C , - 36°C
இ. 275°C , - 29°C
ஈ. 325°C , - 39°C

9. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
அ. விசையின் திருப்புத்திறன்
= F × d
ஆ. வேலை (W) = F × S
இ. திறன் (P) = W/t
ஈ. ஒரு குதிரைத்திறன் = 786 வாட்

10. மின்காந்தத் தூண்டல் ஆய்வைக் கண்டறிந்த அறிவியலறிஞர் யார்?
அ. வோல்டா
ஆ. லெக்லாஞ்சி
இ. ஒயர்ஸ்டெட்
ஈ. டேஞ்ஜன்ட்

11. சூரிய ஒளி புவியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம் யாது?
அ. 200நொடிகள்
ஆ. 300நொடிகள்
இ. 400நொடிகள்
ஈ. 500நொடிகள்

12. நட்சத்திரம் எந்தத் தத்துவத்தில் ஒளிர்கிறது?
அ. ஒளி விலகல்
ஆ. ஒளி எதிரொளிப்பு
இ. முழு அக எதிரொளிப்பு
ஈ. எதுவுமில்லை

13. இரு சமதள ஆடிகளால் தொடர்ந்து எதிரொளிப்பு அடைவதைத் தத்துவமாகக் கொண்டு இயங்கும் கருவி எது?
அ. என்டாஸ்கோப்
ஆ. பெரிஸ்கோப்
இ. போட்டோமீட்டர்
ஈ. பைக்னோமீட்டர்

14. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
அ. சிஸ்மோகிராப் -
பூகம்ப அளவி
ஆ. செக்ஸ்டான்ட் -
கோணத் தொலை அளவி
இ. பிளான்ட்டிமீட்டர் -
அடர் அளவி
ஈ. பைரோமீட்டர் -
கனல் அளவி

15. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
அ. குரோனாமீட்டர் -
கால அளவி
ஆ. ஹைடிரோமீட்டர் -
திரவமானி
இ. ஹைடிரோஃபோன் -
நீரொலி வாங்கி
ஈ. லாக்டோமீட்டர் -
ஈரப்பதங்காட்டி

16. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
அ. தேசிய மின் வேதியியல் ஆய்வகம் - காரைக்குடி
ஆ. தேசிய வேதியியல் ஆய்வகம் - புனே
இ. தேசிய தோல் ஆராய்ச்சி மையம் - கான்பூர்
ஈ. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் - பெங்களூரு

17. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
அ. தேசிய உடற்கூறு ஆய்வகம் - புதுடெல்லி
ஆ. தேசிய அறிவியல் உபகரணங்கள் அமைப்பு - புனே
இ. தேசிய மருந்துகள் ஆய்வகம் - லக்னோ
ஈ. தேசியத் தொழில்நுட்ப உணவு ஆய்வகம் - மைசூரு

18. சூரியக் குடும்பத்தில் இரண்டாவது மிகப் பெரிய கோள் எது?
அ. வியாழன் ஆ. பூமி
இ. சனி ஈ. புதன்

19. சூரியன், பூமியைப் போன்று எத்தனை மடங்கு எடை உடையது?
அ. 19 ஆ. 109
இ. 1009 ஈ. 10,009

20. வேறுபட்ட அணு எண்களையும் ஒத்த நிறை எண்களையும் கொண்ட தனிமங்களளின் அணுக்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
அ. ஐசோபார்
ஆ. ஐசோடோப்
இ. ஐசோடோன்
ஈ. இவை மூன்றும் இல்லை

பகுதி-13இல் கேட்கப்பட்டிருந்த வினாக்களுக்கான விடைகள்:

1. ஆ. துருக்கி (இஸ்தான்புல்)

2. இ. மகாராஷ்டிரம் (லாசல்கான்)

3. இ. நாகப்பட்டினம்

4. ஈ. சிங்கப்பூர்

5. அ. 122ஆவது (2017)

6. ஆ. 1935 (1949 இல் தேசியமயம்)

7. இ. கியூபா

8. ஆ. 12 (குறிஞ்சிப்பூ 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும்)

9. இ. இங்கிலாந்து

10. ஆ. வெள்ளை அல்லி

11. ஈ. அபுல் கலாம் ஆசாத்

12. அ. நாய் (லைக்கா)

13. ஆ. குரு அர்ஜுன் தேவ்

14. அ. பேடன் பவல் (இங்கிலாந்து)

15. ஆ. நியூசிலாந்து

16. இ. பூடான்

17. இ. போலந்து

18. இ. எகிப்து

19. அ. பெல்ஜியம்

20. ஆ. அரிஸ்டாட்டில்

தொகுப்பு: ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளைத் தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x