Published : 14 Aug 2016 04:03 PM
Last Updated : 14 Aug 2016 04:03 PM

குறிப்புகள் பலவிதம்: சர்க்கரையைக் குறைக்கும் சிறியாநங்கை!

இயற்கையோடு இயைந்த வாழ்க்கைதான் என்றும் உகந்தது. பல்வேறு நிறமூட்டிகளும் மணமூட்டிகளும் செயற்கையாகச் சேர்க்கபட்டு, டப்பாக்களில் அடைத்துவரும் பொடிகளைச் சாப்பிடுவதைவிட இயற்கையாகப் பெறப்படும் பொருட்களை அரைத்துப் பொடியாக்கிப் பயன்படுத்தினால் நீடித்த, ஆரோக்கியமான வாழ்க்கை சாத்தியம். எந்தெந்தப் பொடிகளுக்கு என்னென்ன பலன் என்று பார்க்கலாம்.

திரிபலா பொடி: வயிற்றுப் புண்ணை ஆற்றும்.

அதிமதுரம் பொடி: தொண்டை கமறல், வறட்டு இருமலைச் சீராக்கும்.

துத்தி இலைப் பொடி: உடல் சூட்டைத் தணிக்கும். உள், வெளி மூல நோய்க்கு சிறந்தது.

கரிசலாங்கண்ணி பொடி: காமாலையைக் கட்டுக்குள் வைக்கும். ஈரல் நோய்க்கு ஏற்றது. கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.

சிறியாநங்கை பொடி: விஷக்கடிக்கு நிவாரணம் தரும். சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

கீழாநெல்லிப் பொடி: மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு உகந்தது.

முடக்கத்தான் பொடி: மூட்டு வலி, முழங்கால்வலி, வாதம் ஆகியவற்றுக்கு நல்லது.

கோரைகிழங்கு பொடி: ஆண்மை விருத்திக்கு ஏற்றது. உடல் பொலிவு பெற உதவும். சருமப் பாதுகாப்புக்கு வழிவகுக்கும்.

குப்பைமேனி பொடி: சொறி, சிரங்கு, தோல் வியாதிக்குச் சிறந்தது.

பொன்னாங்கண்ணி பொடி: உடல் சூட்டுக்கும், கண் நோய்க்கும் சிறந்த நிவாரணி.

லவங்கப்பட்டை பொடி: கொழுப்புசத்தைக் குறைக்கும். மூட்டு வலிக்கு ஏற்றது.

வாதநாராயணன் பொடி: பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும். பாகற்காய் பொடி: குடல்வால் புழுக்களை அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

வாழைத்தண்டு பொடி: சிறுநீரகக் கோளாறு, கல் அடைப்புக்கு உகந்தது.

- தேவி, சென்னை.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x