செய்திப்பிரிவு

Published : 03 Aug 2019 12:14 pm

Updated : : 03 Aug 2019 12:14 pm

 

குளியலறை விரிப்பான்

bathroom-expander

அனில் 

இப்போது வீட்டுத் தளம் என்றால் டைல் தரைகள் மட்டுமே பெரும்பாலும் இடப்படுகின்றன. ஒவ்வோர் அறைக்கும் தகுந்தாற்போல் டைலைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துகிறோம். சிலர் மார்பிள், கிரானைட் போன்ற இயற்கைக் கற்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், பெரும்பாலானவர்கள் குளியலறைக்கு டைல்தான் பயன்படுத்துகிறார்கள். 

குளியலறைக்கு டைல் பயன்படுத்துவதில் பல நன்மைகள் இருக்கின்றன. அழுக்குப் படியாமல் எளிதில் சுத்தப்படுத்த முடியும். அதுபோல் டைல் குளியலறைக்கு அழகான தோற்றத்தை அளிக்கும். அதே நேரம் இந்த டைலால் வேறு சில பிரச்சினைகளும் வரும். டைல் பொதுவாக வழுக்கும் தன்மை கொண்டது. நாம் என்னதான் சொரசொரப்பான டைலை வாங்கிப் பயன்படுத்தினாலும் வயதானவர்கள் சோப்பு நீர் பட்டு வழுக்கிவிழ வாய்ப்புள்ளது. எவ்வளவு கவனமாக இருந்தாலும் வயதானவர்கள் வழுக்கி விழுவது அடிக்கடி யாராவது ஒரு வீட்டில் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. 

வயதானவர்களின் காலில் பலம் இல்லாமல் இருப்பதால் மற்றவர்களைப் போல வழுக்கும் போது கால்கள் தரையைத் தாங்கி பிடிக்க இயலாது என்பதால் அவர்களுக்கு வழுக்கும் போது நிலை தடுமாறி விழுவது தவிர்க்க முடியாததாக உள்ளது. தற்போது அதற்கும் தீர்வு கிடைத்துள்ளது. குளியலறையில் வழுக்காமலிருக்க தரை விரிப்பான் போன்று வழுக்காத தரை விரிப்பு (Anti Skid Mat) ‘ஆன்டி ஸ்கிட் மேட்’ என்ற பெயரில் மேட் வந்துள்ளது. சாதாரணக் கால்மிதியடி போன்ற அமைப்பில் அனைத்து அளவுகளிலும் கிடைப்பதால் அதனை நமது குளியலறையின் அளவுக்கு ஏற்றவாறு வாங்கி குளியலறையில் விரித்துவிட்டால் குளியலறை வழுக்காமல் இருக்கும்.

பல வண்ணங்களில் பல டிசைன்களில் இந்த மேட் கிடைக்கிறது. ஆன்லைனிலும் வாங்கிக் கொள்ளலாம். நகரங்களில் உள்ள பெரிய கடைகளிலும் இது கிடைக்கக்கூடும். புதிதாக வீடு கட்டுபவர்கள் கட்டுமானச் செலவுடன் இந்தச் செலவையும் செய்து குளியலறைப் பிரச்சினையை ஆரம்பத்திலிருந்தே தீர்த்துக் கொள்ளலாம்.
இந்த விரிப்பானை விரித்துவிட்டால் வழுக்காது தண்ணீரும் வழிந்தோடிவிடும் என்பதால் வயதானவர்களுக்கு இது மிகவும் பாதுகாப்பானது. இதைக் குறிப்பிட்ட தினங்களுக்கு ஒரு முறை தரையிலிருந்து அகற்றி தரையை நன்கு கழுவி பிறகு விரிப்பை விரித்துவிடுங்கள். இப்படிச் செய்வதனால் கீழே தங்கியுள்ள அழுக்குகள் நீங்கி குளியலறையைச் சுகாதாரமாகப் பராமரிக்கலாம்.

வீட்டுத் தளம்குளியலறை விரிப்பான்குளியலறை

Popular Articles

You May Like

More From This Category

More From this Author