Published : 08 Apr 2019 12:37 PM
Last Updated : 08 Apr 2019 12:37 PM

வெற்றி மொழி: டென்னசி வில்லியம்ஸ்

1911-ம் ஆண்டு முதல் 1983-ம் ஆண்டு வரை வாழ்ந்த டென்னசி வில்லியம்ஸ் புகழ்பெற்ற அமெரிக்க நாடக ஆசிரியர் ஆவார். கவிதை, கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் மற்றும் நினைவுகளின் தொகுப்புகள் போன்றவையும் இவரது படைப்புகளில் அடங்கும். பெரும்பாலான இவரது ஆக்கங்கள் இவரது வாழ்க்கையையும் அனுபவங்களையுமே பிரதிபலிப்பவையாக இருந்தன.

இவரது சிறந்த படைப்புகளைத் தழுவி திரைப்படங்களும் வெளிவந்துள்ளன. புலிட்சர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். இருபதாம் நூற்றாண்டின் அமெரிக்க நாடக துறையில் முன்னணி நாடக ஆசிரியராகக் கருதப்படுபவர்.

# வேண்டுமென்றே செய்யப்படும் கொடூரங்கள் மன்னிக்க முடியாதவை.

# வாழ்க்கை என்பது பதிலளிக்கப்படாத கேள்வி, ஆனால் கேள்விக்குரிய மரியாதை மற்றும் முக்கியத்துவத்தை இன்னமும் நம்புவோம்.

# நம் ஒட்டுமொத்த நினைவகமே நம் வாழ்க்கை.

# வாழ்க்கையின் ஒரு பகுதி நாம் என்ன செய்கிறோம் என்பது, மற்றொரு பகுதி நாம் தேர்ந்தெடுத்த நண்பர்களால் உருவாக்கப்படுவது.

# நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று அதிர்ஷ்டம் உங்களை நம்புகிறது.

# வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம் உற்சாகம்.

# எழுத்து நேர்மையானதாக இருந்தால், எழுதியவரிடமிருந்து அதனை பிரிக்க முடியாது.

# மரணம் ஒரு கணம், வாழ்க்கை அதில் பல கணங்கள்.

# நேரம் என்பது இரண்டு இடங்களுக்கு இடையேயான மிக நீண்ட தூரமாக இருக்கிறது.

# செயல்படாமல் இருக்கும்போது நான் இறந்தவனாகிறேன்.

# வெற்றி மற்றும் தோல்வி ஆகிய இரண்டுமே சம அQAAளவிலான பேரழிவுகள்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x