உலக குத்துச்சண்டையில் இந்திய வீரர்கள் அசத்தல்

உலக குத்துச்சண்டையில் இந்திய வீரர்கள் அசத்தல்
Updated on
1 min read

பாங்காக்: தாய்​லாந்​தின் பாங்​காக் நகரில் உலக குத்துச்சண்டை ஃபியூச்​சர்ஸ் கோப்பை நடை​பெற்று வருகிறது. இதில் ஆடவருக்​கான 48 கிலோ எடை பிரிவு கால் இறுதி சுற்​றல் இந்​தி​யா​வின் கன்​ஜன் 5-0 என்ற கணக்கில் அஜர்​பைஜானின் குலார் ஹுசைனோவா வீழ்த்தி அரை இறுதிக்கு முன்​னேறி​னார்.

54 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்​றில் இந்​தி​யா​வின் ஜாய் தேவி, ஜப்​பானின் யூரா கனேமருவை தோற்​கடித்து அரை இறுதி சுற்​றில் நுழைந்​தார். 50 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்​றில் இந்​தி​யா​வின் அம்​பேகர் மீட்டி 4-1 என்ற கணக்​கில் ஜப்​பானின் அகிரா யுகு​போவை வீழ்த்தி அரை இறுதி சுற்​றில் கால்​ப​தித்​தார்.

மகளிருக்​கான 51 கிலோ எடைப் பிரிவு கால் இறு​தி​யில் இந்தி​யா​வின் சந்​திரிகா புஜ​ராரி, ஸ்பெ​யினின் ஆண்ட்ரியா புல்கா கார்​சி​யாவை தோற்​கடித்​தார். 57 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்​றில் இந்​தி​யா​வின் ராதாமணி லாங்​ஜம் 4-1 என்ற கணக்​கில் இங்​கிலாந்​தின் சியோபன் ஹேலியை வீழ்த்தி அரை இறு​திக்கு முன்னேறினார். இதன் மூலம் இந்​தத் தொடரில் இந்​தியா 5 பதக்​கங்​களை கைப்​பற்​று​வதை உறு​தி செய்​துள்​ளது.

உலக குத்துச்சண்டையில் இந்திய வீரர்கள் அசத்தல்
மிக நெருங்கிய நட்பு நாடுகளில் இந்தியாவும் ஒன்று: நிச்சயம் உதவி செய்வதாக ஈரான் தூதர் உறுதி
உலக குத்துச்சண்டையில் இந்திய வீரர்கள் அசத்தல்
காளியம்மாள் ‘சாய்ஸ்’ அதிமுக ஏன்? - ஒரு விரைவுப் பார்வை
உலக குத்துச்சண்டையில் இந்திய வீரர்கள் அசத்தல்
ஈரானின் ‘ஆயில்’ ஆயுதம்... போரில் ட்ரம்ப்புக்கு சேதாரமா? - ஒரு நிலவரப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in