Published : 12 May 2023 08:59 AM
Last Updated : 12 May 2023 08:59 AM
தோகா: ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் ஆசிய கோப்பை கால்பந்து தொடர் வரும் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் தோகாவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடருக்கான டிரா நேற்று தோகாவில் நடைபெற்றது. தொடரில் கலந்து கொள்ளும் 24 அணிகளும் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் உள்ளன.
இந்த தொடரில் விளையாட தொடர்ச்சியாக 2-வது முறையாக தகுதி பெற்றுள்ள இந்திய அணி கடினமான ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா, சிரியா, உஸ்பெகிஸ்தான் அணிகள் உள்ளன. கடந்த முறை நடைபெற்ற தொடரில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் தாய்லாந்தை வீழ்த்தியது. ஆனால் அடுத்த இரு ஆட்டங்களிலும் தோல்வி அடைந்து வெளியேறியது.
தொடரை நடத்தும் கத்தார் ‘ஏ’ பிரிவில் உள்ளது. இதே பிரிவில் சீனா, தஜிகிஸ்தான் லெபனான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ‘சி’ பிரிவில் ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், ஹாங் காங், பாலஸ்தீனம் அணிகளும் ‘டி’ பிரிவில் ஜப்பான், இந்தோனேஷியா, ஈராக், வியட்நாம் அணிகளும் ‘இ’ பிரிவில் தென் கொரியா, மலேசியா, ஜோர்டான், பக்ரைன் அணிகளும் ‘எஃப்’ பிரிவில் சவுதி அரேபியா, தாய்லாந்து, கிர்கிஸ்தான், ஓமன் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT