Published : 13 Feb 2023 04:11 PM
Last Updated : 13 Feb 2023 04:11 PM

WPL ஏலம் | ரூ.3.4 கோடிக்கு வாங்கிய ஆர்சிபி: உற்சாகத்தில் ஸ்மிருதி மந்தனா!

ஸ்மிருதி மந்தனா | படம்: ட்விட்டர்

மும்பை: முதல் சீசனுக்கான மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் இந்திய அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவை 3.4 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. ஏல நிகழ்வை தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய வீராங்கனைகள் நேரலையில் பார்த்து வருகின்றனர். தனக்கிருந்த டிமாண்டை பார்த்து ஸ்மிருதி உற்சாகத்தில் திகைத்துப் போயுள்ளார். அவருக்கு சக இந்திய அணி வீராங்கனைகள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

மும்பையில் நடைபெறும் இந்த ஏலத்தில் முதல் வீராங்கனையாக ஸ்மிருதி பெயர் அறிவிக்கப்பட்டது. அவரது அடிப்படை விலை ரூ.50 லட்சம். மும்பை அணி முதலாவது அணியாக ஏலத்தில் அவரை வாங்க விருப்பம் தெரிவித்தது. இருந்தபோதும் பெங்களூர் அணி நிர்வாகம் தொடர்ந்து ஏலம் கேட்டது. இரு தரப்பும் விடாமல் ஏலம் கேட்க, இறுதியில் பெங்களூரு அணி ஸ்மிருதியை வாங்கியது.

கடந்த 2013-ல் 16 வயதில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானவர் ஸ்மிருதி. அதிரடி தொடக்க வீராங்கனையான அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 112 போட்டிகளில் 2651 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணி சார்பில் அதிவேக அரைசதம் பதிவு செய்துள்ள வீராங்கனை. மகளிர் பிக் பேஷ் லீக், இங்கிலாந்தில் நடைபெறும் மகளிர் லீக் தொடர்களில் விளையாடி உள்ளார். இதுவரையிலான இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீராங்கனையாக ஸ்மிருதி உள்ளார். அணியை தலைமை தாங்கும் திறனும் கொண்டவர்.

இதுரையில் ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீராங்கனைகள்:

  1. ஸ்மிருதி மந்தனா: ரூ.3.4 கோடி - ஆர்சிபி
  2. நெட் ஸ்வியர்: ரூ.3.2 கோடி - மும்பை இந்தியன்ஸ்
  3. ஆஷ்லே கார்ட்னர்: ரூ.3.2 கோடி - குஜராத் ஜெயண்ட்ஸ்
  4. தீப்தி சர்மா: ரூ.2.6 கோடி - உ.பி வாரியர்ஸ்
  5. ஜெமிமா ரோட்ரிக்ஸ்: ரூ.2.2 கோடி - டெல்லி கேபிடல்ஸ்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x