Published : 05 Aug 2022 09:18 PM
Last Updated : 05 Aug 2022 09:18 PM

CWG மல்யுத்தம் | தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் பஜ்ரங், சாக்‌ஷி, தீபக், அன்ஷு மாலிக்

பர்மிங்கம்: நடப்பு காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில் இந்திய மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, தீபக் புனியா, அன்ஷு மாலிக் மற்றும் சாக்‌ஷி மாலிக் ஆகியோர் தங்கப் பதகத்திற்கான போட்டியில் இன்று இரவு அதிவிரைவில் பலப்பரீட்சை செய்ய உள்ளார்கள். இதன் மூலம் இந்தியாவுக்கு 4 பதக்கங்கள் உறுதியாகி உள்ளது.

  • மகளிர் ஃப்ரீஸ்டைல் 57 கிலோ பிரிவு ஃபைனல்: அன்ஷு மாலிக் vs நைஜீரியாவின் ஒடுனாயோ ஃபோலாசடே அடேகுரோயே
  • ஆடவர் ஃப்ரீஸ்டைல் 65 கிலோ பிரிவு ஃபைனல்: பஜ்ரங் புனியா vs கனடாவின் லாச்லன் மெக்னீல்
  • மகளிர் ஃப்ரீஸ்டைல் 62 கிலோ பிரிவு ஃபைனல்: சாக்‌ஷி மாலிக் vs கனடாவின் அனா கோடினெஸ் கோன்சாலஸ்
  • ஆடவர் ஃப்ரீஸ்டைல் 86 கிலோ பிரிவு ஃபைனல்: தீபக் புனியா vs பாகிஸ்தானின் முகமது இனாம்
  • இவர்களை தவிர வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் 68 கிலோ பிரிவில் திவ்யாவும், 125 கிலோ பிரிவில் ஆரோன் ஜான்சனும் விளையாடுகிறார்கள்.

இந்தப் போட்டிகள் விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியா நடப்பு காமன்வெல்த் தொடரில் 6 தங்கம், 7 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் வென்று 20 பதக்கங்களுடன் 7-வது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டிகளின் மூலம் அந்த எண்ணிக்கை மேலும் கூட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x