Published : 02 Apr 2016 08:02 AM
Last Updated : 02 Apr 2016 08:02 AM

இரண்டு நோபால்களால்தான் ஆட்டத்தின் முடிவு எங்களுக்கு சாதகமாக அமைந்தது: லெண்டில் சிம்மன்ஸ் கருத்து

டி 20 உலகக் கோப்பை இந்தியா வுக்கு எதிரான அரையிறுதியில் இரண்டு நோபால்களால்தான் ஆட்டத்தின் முடிவு எங்களுக்கு சாதகமாக அமைந்ததாக மேற் கிந்தியத் தீவுகள் பேட்ஸ்மேன் லெண்டில் சிம்மன்ஸ் தெரிவித்தார்.

டி 20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான அரை யிறுதி ஆட்டத்தில் 18, 50 ரன் களில் ஆட்டமிழக்க வேண்டிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பேட்ஸ்மேன் லெண்டில் சிம்மன்ஸ் இரு நோபால்களால் ஆட்டமிழப்பதில் இருந்து தப்பித்து கிடைத்த வாய்ப்பை மேலும் சிறப்பாக பயன்படுத்தில் 51 பந்தில் 82 ரன் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார்.

இதுதொடர்பாக லெண்டில் சிம்மன்ஸ் கூறியதாவது:

இரண்டு நோபால்கள்தான் ஆட்டம் எங்களுக்கு சாதகமாக அமைய உதவியது என்று நினைக் கிறேன். தொடக்க வீரரான சார்லஸ் முதலில் நெருக் கடியை குறைத்தார். சூழ் நிலையை நன்கு அறிந்து கொண்டு அதற்கு தகுந்தபடி விளையாடி பவுண்டரிகள் அடித்தார்.

பேட்டிங்கில் நான் களமிறங் கும் போது என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். ஏனெனில் இலக்கை துரத்துவதற்காக நாங்கள் திட்டம் அமைத்திருந்தோம். இந்த நாள் எனது நாளாக அமைந்திருந்தது. அதிர்ஷ்டமும் என் பக்கம் இருந்தது. அதன் வழியே சென்று நான் விரும்பிய ஆட்டத்தை விளையாடினேன்.

எங்கள் அணி தனிப்பட்ட எந்த ஒரு வீரரின் ஆட்டத்தையும் சார்ந்ததில்லை. கிறிஸ் கெய்லுக்கு ஆட்டம் சிறப்பாக அமையாத போதும் ஆட்டத்தின் போக்கை நிர்வகித்து வெற்றி கண்டுள்ளோம். பெரிய இலக்கை நோக்கி துரத்தும் போது கெய்ல் ஆட்டமிழந்தாலும் போராடி வெற்றி பெறும் திறன் எங்களிடம் உள்ளது. அந்த வகையிலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமையான வீரர்கள் அணியில் உள்ளனர்.

இறுதிப்போட்டி நடைபெறும் கொல்கத்தா மைதானம் இதே போன்று பேட்டிங்கிற்கு சாதக மாக இருக்காது. அங்கு வித்தியா சமான சூழ்நிலை இருக்கும். ஐபிஎல் தொடர்தான் என்னை சிறந்த வீரராக மேம்பட செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வான்கடே மைதானத்தில் அதிக ஆட்டங்களில் விளையாடி உள்ள தால் மைதானத்தின் தன்மையை நன்கு அறிந்திருந்தேன். இது சிறப்பாக செயல்பட உதவியது.

இவ்வாறு சிம்மன்ஸ் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x