Published : 25 Dec 2015 11:47 AM
Last Updated : 25 Dec 2015 11:47 AM

தெற்கு ஆசிய கால்பந்து: இந்தியா-இலங்கை இன்று மோதல்

திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் தெற்கு ஆசிய கால்பந்து போட்டியில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்தியா, இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவு, பூட்டான் ஆகிய 7 நாடு கள் பங்கேற்றுள்ள தெற்கு ஆசிய கால்பந்து போட்டி நேற்று முன்தினம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது முதல் ஆட்டத்தில் இன்று இலங்கையுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் மாலை 6. 30 மணிக்கு நடைபெறுகிறது.

2018 உலககோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டங்களில் இந்தியா சிறப்பாக செயல்படவில்லை. 6 ஆட்டத்தில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றது. ஆனால் தெற்கு ஆசிய கால்பந்து போட்டிக்கான அணியில் இளம் வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர். அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களில் பெரும்பாலானோர் 23 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் தான்.

இந்திய அணி சுனில் சேத்ரி தலைமையில் களம் காண்கிறது. ஐஎஸ்எல் தொடரில் சிறப்பாக ஆடிய ஜிஜி மற்றும் பிர்தாம் கோடல், நாரயண் தாஸ், ரவுலின், பிரணாய் ஹல்டேர், கோலிச்ஷரன், குர்பிரித் சிங், கவுசிக் சர்கார், தோங்கோஸியம், சுமித் பாஸி ஆகியோரும் அணியில் உள்ளனர்.

போட்டி தொடர்பாக பயிற்சியாளர் கான்ஸ்டான்டின் கூறும்போது, இலங்கை அணி தற்காப்பு ஆட்டத்தை உருவாக்கி அதன் பின்னர் தாக்குதல் ஆட்டத்தை தொடுக்கக் கூடியது. அந்த அணியில் சிறந்த வீரர்கள் உள்ளனர்.

கடுமையாக போராடக்கூடிய அணியாகவும் இலங்கை உள்ளது. அதனால் எங்களுக்கு இந்த ஆட்டம் எளிதாக இருக்காது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x