Published : 08 Aug 2015 09:50 AM
Last Updated : 08 Aug 2015 09:50 AM

பயிற்சி ஆட்டம்: இந்தியா முன்னிலை

கொழும்பில் நடைபெற்று வரும் இலங்கை வாரியத் தலைவர் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 351 ரன்கள் எடுத்தது. இஷாந்த் சர்மா அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டு களைக் கைப்பற்ற வாரியத் தலைவர் அணி 121 ரன்களில் சுருண்டது.

முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 79 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்திருந்தது. ரஹானே 109, அஸ்வின் 10 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 2-ம் நாள் ஆட்டத்தில் ரஹானே 109 ரன்களில் ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். அஸ்வின் 23, அமித் மிஸ்ரா ரன் ஏதுமின்றியும், ஹர்பஜன் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். புவனேஷ்வர் குமார் 9 ரன்களில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்தியா 88.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 351 ரன்கள் எடுத்தது.இலங்கை தரப்பில் ரஜிதா 5 விக்கெட் வீழ்த்தினார்.

இஷாந்த் அபாரம்

வாரியத் தலைவர் அணியின் முதல் 5 விக்கெட்டுகள் இஷாந்த் சர்மாவின் வேகத்தில் சிதறின. அந்த அணி 10 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. டிக்வெல்லா 41, வர்தனா 32 ரன்கள் குவித்தனர். அந்த அணி 31 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ரன்கள் எடுத்தது.

ஆரோன், அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியாவுக்கு ரோஹித் (8), கோலி (18), சஹா (1) ஏமாற்றம் அளித்தனர். 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 40 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா 112 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 31 ரன்களுடனும், ராகுல் 47 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இலங்கையின் பெர்னான்டோ 2 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x