Last Updated : 10 Aug, 2017 10:44 AM

 

Published : 10 Aug 2017 10:44 AM
Last Updated : 10 Aug 2017 10:44 AM

ரவீந்திர ஜடேஜாவுக்கு மாற்று வீரராக அக்ஷர் படேல் சேர்ப்பு

 

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 3-வது டெஸ்ட் பல்லேகலே மைதானத்தில் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது.

இதற்கிடையே 2-வது டெஸ்ட் போட்டியின்போது ஐசிசி விதி முறைகளை மீறி நடந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட, இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவுக்கு 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனால் அவருக்கு மாற்றாக இடதுகை சுழற்பந்து வீச்சாளரான அக்ஷர் படேல், அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுவினர், ஜடேஜாவுக்கு மாற்றாக அக்ஷர் படேலைத் தேர்ந்தெடுத்துள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தென் ஆப்பிரிக்காவில் முடிவடைந்த முத்தரப்பு தொடரில், அக்ஷர் படேல், இந்தியா ஏ அணிக்காக சிறப்பாக விளையாடியிருந்தார். ஏற்கெனவே குல்தீப் அணியில் இருப்பதால் அக்ஷர் படேலுக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x