Published : 09 Aug 2017 03:20 PM
Last Updated : 09 Aug 2017 03:20 PM

ஹர்திக் பாண்டியாவை பென் ஸ்டோக்ஸுடன் ஒப்பிடுவதா?- கோலி புகழாரத்துக்கு கம்பீர் மாற்றுக் கருத்து

ஹர்திக் பாண்டியா இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் போல் சிறந்த ஆல்ரவுண்டராக வளர்வார் என்றார் கேப்டன் விராட் கோலி, ஆனால் பாண்டியா இன்னும் அதிக தொலைவு செல்ல வேண்டியுள்ளது என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

ஆங்கில இணையதளம் ஒன்றில் கவுதம் கம்பீர் கூறியதாவது:

பாண்டியா இன்னும் நிறைய மேம்பட வேண்டியிருக்கிறது. குறிப்பாக அவரது பேட்டிங்கில் இன்னும் முன்னேற்றம் தேவை. ஒரேமாதிரியாக ஆட முடியாது. இப்போதைக்கு அவரால் இப்படி ஆட முடிவதன் காரணம் டாப் 3 பேட்ஸ்மென்கள் ரன்களைக் குவித்து விடுகின்றனர். அதனால் களத்தில் இறங்கி அடித்து ஆட முடிகிறது பாண்டியாவினால்.

ஆனால் நீண்ட நாள் தாக்குப் பிடிக்க உத்தியை இன்னும் மேம்படுத்த வேண்டும். 2-3 விக்கெட்டுகள் விரைவில் விழுந்து அணி நெருக்கடிக்குள்ளாகும் போது அவர் பேட்டிங்கில் இன்னும் கூடுதல் திடத்தன்மை தேவை.

இப்போதைக்கு என்னைப் பொறுத்தவரையில் பென் ஸ்டோக்ஸ் போன்ற ஆல்ரவுண்டர்கள் இடத்திலெல்லாம் அவர் இல்லை. உத்தி ரீதியாக அவர் நிறைய கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.

அணியில் அவர் ஒரு அதிரடி வீரராக இருக்கலாம். அதே வேளையில் உருப்படியான உத்தி தேவை.

இப்போதைக்கு அவர் ஆடமுடிவதற்கான சூழல் இருப்பதால் ஆடும் இன்னிங்ஸ்களை வைத்து ஒரேயடியாக நாம் அந்த இடத்துக்கு அவரை ஒப்பிட முடியாது.

இவ்வாறு கூறினார் கம்பீர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x