Published : 16 Aug 2016 08:55 AM
Last Updated : 16 Aug 2016 08:55 AM
திருவாரூர் மாவட்ட ஹாக்கி கழகம் மற்றும் ஏஎஸ்எம் ஹாக்கி கிளப் சார்பில், மாநில அளவிலான ஆடவர் ஹாக்கி போட்டி நடத்தப்பட்டது.
இதன் இறுதிப் போட்டியில் சென்னை ஜேகேஎல் ஹாக்கி அகாடமி அணி 3-0 என்ற கோல் கணக்கில் சென்னை செயின்ட் ஜோசப் கல்லூரி அணியை தோற்கடித்தது. திருச்சி லெவன்ஸ் அணி 3-வது இடத்தை பிடித்தது.
***************
சங்கிலி குண்டு எறிதலில் சாதனை
ஒலிம்பிக்கில் மகளிருக்கான சங்கிலி குண்டு எறிதல் போட்டியின் இறுதி சுற்றில் போலந்து நாட்டின் அனிதா லோடர்ஸ்கை 82.29 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார்.
கடந்த 1-ம் தேதி அவர் போலந்து நாட்டில் நடைபெற்ற போட்டியில் 81.08 தூரம் எறிந்து உலக சாதனை படைத்திருந்தார். தற்போது அந்த சாதனையை அவரே முறியடித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT