Last Updated : 06 Jul, 2016 07:14 PM

 

Published : 06 Jul 2016 07:14 PM
Last Updated : 06 Jul 2016 07:14 PM

மேற்கிந்தியத் தீவுகளுக்கு புறப்பட்டது இந்திய அணி

இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து 4 டெஸ்டில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வரும் 21-ம் தேதி ஆன்டிகுவாவில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் பயிற்சி ஆட்டம் 9-ம் தேதி நடைபெறுகிறது.

மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்காக இந்திய வீரர்களின் பயிற்சி முகாம் பெங்களூரில் கடந்த 29-ம் தேதி தொடங்கியது. 6 நாட்கள் நடைபெற்ற பயிற்சி முகாமில் புதிய தலைமை பயிற்சியாளரான கும்ப்ளே மேற்பார்வையில் வீரர்கள் பயிற்சி பெற்றனர். பயிற்சி முகாம் நிறைவடைந்த நிலையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று முன்தினம் நள்ளிரவு மேற்கிந்தியத் தீவுகளுக்கு புறப்பட்டு சென்றது.

இந்திய அணி 5 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கிந்தியத் தீவுகள் சென்றுள்ளது. கடைசியாக 2011-ம் ஆண்டு டோனி தலைமையிலான இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளில் 3 டெஸ்டில் விளையாடி 1-0 என தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில் தான் கோலி அறிமுகமானார்.

5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நட்சத்திர பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் அவர் இந்த தொடரை எதிர்கொள்கிறார். 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் கோலி, கும்ப்ளே கூட்டணிக்கு சவாலாக இருக்கும்.

இந்திய அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், முரளி விஜய், ராகுல், ரஹானே, புஜாரா, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, விருத்திமான் சகா, ஸ்டுவர்ட் பின்னி, அஸ்வின், அமித் மிஸ்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ஷர்துல் தாக்கூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x