Published : 31 Mar 2019 07:43 AM
Last Updated : 31 Mar 2019 07:43 AM

ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதவுள்ளன.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இந்தப் போட்டி இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது.

முதல் 2 லீக் ஆட்டங்களில் சிஎஸ்கே அணி சிறப்பாக விளையாடி வெற்றியைப் பெற்றுள்ளது. இதையடுத்து 3-வது ஆட்டத்திலும் வெற்றியைப் பெற்று ஹாட்ரிக் வெற்றியைச் சுவைக்கும் முனைப்பில் அணி வீரர்கள் உள்ளனர். ஷேன் வாட்சன், அம்பாதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், தோனி, ஜடேஜா என சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது.

அதைப் போலவே ஷர்துல் தாக்குர், தீபக் ஷகார், ஹர்பஜன் சிங், இம்ரான் தஹிர், டுவைன் பிராவோ ஆகியோர் பவுலிங்கில் அசத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில் முதல் 2 ஆட்டங்களிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வி கண்டு இக்கட்டான நிலையில் விளையாடவுள்ளது.

ரஹானே, சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் தங்களது உயர்மட்டத் திறனை இந்த ஆட்டத்திலும் வெளிப்படுத்த தயார் நிலையில் உள்ளனர்.

அணி விவரம்:

சென்னை சூப்பர் கிங்ஸ்: தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பாதிராயுடு, ஷேன் வார்டன், டூபிளெசிஸ், முரளி விஜய், கேதர் ஜாதவ், சாம் பில்லிங்ஸ், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஷோரே, சைதன்யா பிஷ்னோய், ரித்துராஜ் கெய்க்வாட், டுவைன் பிராவோ, கரன்சர்மா, இம்ரான் தஹிர், ஹர்பஜன் சிங், மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்குர், மோஹித் சர்மா, கே.எம்.ஆசிப், தீபக் ஷகார், என்.ஜெகதீசன்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: அஜிங்க்ய ரஹானே (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஜாஸ் பட்லர், ஆஷ்டன் டர்னர், ஐஷ் சோதி, ஓஷானே தாமஸ், லியாம் லிவிங்ஸ்டோன், சஞ்சு சாம்சன், சுபம் ரஞ்சனே, ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரேயஸ் கோபால், சுதீஷன் மிதுன், ஜெய்தேவ் உனத்கட், பிரசாந்த் சோப்ரா, மஹிபால் லோம்ரார், ஆர்யமான்

பிர்லா, ரியான் பராக், தவல் குல்கர்னி, கிருஷ்ணப்பா கவுதம், வருண் ஆரோன், சஷாங்க் சிங், மனன் வோரா, ராகுல் திரிபாதி.

நேரம்: இரவு 8.

இடம்: சென்னை

ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x