Last Updated : 28 Nov, 2018 09:39 PM

 

Published : 28 Nov 2018 09:39 PM
Last Updated : 28 Nov 2018 09:39 PM

உலகக்கோப்பை ஹாக்கி: முத்திரைப் பதித்த இந்தியா; தென் ஆப்பிரிக்காவை 5-0 என்று ஊதி அபார வெற்றி

43 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக சாம்பியன் கனவுகளுடன் ஆடி வரும் இந்திய ஹாக்கி அணி புவனேஷ்வரில் நடைபெறும் உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டியின் சிபிரிவு ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 5-0 என்று ஊதி முதல் போட்டியிலேயே முத்திரை பதித்தது.

தற்பொது உலகத் தரவரிசை 5ம் இடத்தில் உள்ள இந்திய அணி  1975-ல் கோலாலம்பூரில் உலக சாம்பியன்களானது, அந்த அணிக்குக் கேப்டன் அஜித் பால் சிங். அதில் அசோக்குமார், பிலிப், கோவிந்தா போன்ற டாப் வீரர்கள் ஆடினர்.

இன்றைய போட்டியில் மந்தீப் சிங் (10), ஆகாஷ்தீப் சிங் (12) தொடக்கத்தில் அதிரடி கோல்களை அடிக்க, பிறகு சிம்ரன்ஜீத் சிங் 43, 46 நிமிடங்களில் 2 கோல்களைத் திணித்தார். 45வது நிமிடத்தில் லலித் உபாத்யாய் 5வது கோலை அடித்தார்.

முதல் கால்மணி நேர ஆட்டத்டில் தென் ஆப்பிரிக்க தடுப்பு வீரர்களுக்கு ஆட்டம் காட்டியது இந்திய அணி. ஏகப்பட்ட முறை கோல்களை நோக்கி அருகே சென்றனர், இதில் இருமுறை கோலாக 2-0 என்று இந்திய அணி முன்னிலை வகித்தது.

ஆட்டம் தொடங்கி 3ம் நிமிடத்தில் கேப்டன் மன்பிரீத் சிங் பாக்சிற்குள் மந்தீப் சிங் கவர் செய்யப்படாமல் இருப்பதைப் பார்த்து ஒரு அபார பாஸை செய்தார், ஆனால் மந்தீப் அந்த ஷாட்டுக்கு ஸ்டிக்கைக் கொண்டு செல்ல தவறிவிட்டார்.

ஆனால் 10வது நிமிடத்தில் பெனால்டி கார்னரில் ரிபவுண்ட் பந்தை கோலுக்குள் திணித்தார் மந்தீப்.

பிறகு மந்தீப் சிங், ஹர்மன்பிரீத் சிங் அடித்த தூர ஸ்கூப் ஷாட்டை மிக அருமையாக கட்டுப்படுத்தியதில் பெனால்டி வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைத்தது. ஹர்மன்ப்ரீத் ஹை பிளிக் தென் ஆப்பிரிக்க கோல் கீபர் ரசி பீட்டர்ஸால் தடுக்கப்பட்டது.

2வது கால்மணி நேர ஆட்டத்திலும் கடும் நெருக்கடி கொடுத்தது இந்திய அணி, 19வது நிமிடத்தில் இந்தியாவுக்கு குறைதூர கார்னர் கிடைத்த்து. ஆனால் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை.

இடைவேளைக்கு 2 நிமிடங்களுகு முன்னர் நீல்கண்ட சர்மா மற்ரும் சுமித் ஜோடி போட்டுக் கோண்டு பந்தை கொண்டு சென்றனர், ஆனால் நீல்கண்ட சர்மா அருகில் கிடைத்த கோல் வாய்ப்பை நழுவ விட்டார்.

2-0 என்ற முன்னிலையுடன் 2வது பாதியைத் தொடர்ந்த இந்திய அணி 3வது கால்மணி ஆட்டத்தில் 2 அருமையான பீல்ட் கோல்களை அடித்தது.

தென் ஆப்பிரிக்க அணி 40வது நிமிடத்தில் கோல் அடிக்க் கிடைத்த வாய்ப்பை சுவராக இருந்து ஸ்ரீஜேஷ் தடுத்துவிட்டார்.  இதன் பிறகு பெனால்ட்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது, இதையும் தென் ஆப்பிரிக்கா கோலாக மாற்றவில்லை.

ஆனால் இந்திய அணி 4 நிமிட நேரத்தில் 3 பீல்ட் கோல்களை அடித்து 5-0 என்று தென் ஆப்பிரிக்கா எட்ட முடியா தொலைவுக்கு சென்று பிறகு வெற்றி பெற்றது.

அடுத்ததாக இந்திய அணிக்கு கடினமான, உலகின் நம்பர் 3 அணியான பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது, இது டிசம்பர் 2ம் தேதி நடைபெறுகிறது, தென் ஆப்பிரிக்கா அணி இதே தினத்தில் கனடா அணியை எதிர்கொள்கிறது.

நாளை வியாழக்கிழமை பிரிவு ஏ-யில் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜெண்டினா ஸ்பெயின் அணியையும், நியூசிலாந்து அணி பிரான்சையும் எதிர்கொள்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x