Published : 05 May 2024 07:40 AM
Last Updated : 05 May 2024 07:40 AM

தமிழ்நாடு கோல்ட்ஸ் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம்

சென்னை: தமிழ்நாடு கோல்ட்ஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி மற்றும் 7 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தமிழ்நாடு விளையாட உள்ளது.

இந்த அணிக்கு லட்சுமிபதி பாலாஜி, தன்வீர் ஜப்பார் ஆகியோர் பயிற்சியாளர்களாக உள்ளனர். ராபின் சிங் ஆலோசகராக செயல்பட உள்ளார். ரஞ்சி கோப்பையில் விளையாடி உள்ள பிரதோஷ் ரஞ்ஜன் பால், என்.ஜெகதீசன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த சுற்றுப்பயணத்தில் தமிழ்நாடு அணி 7 ஒருநாள் போட்டியிலும் வெவ்வேறு அணியுடன் மோதுகிறது. இதன் முதல் ஆட்டம் நாளை (6-ம் தேதி) நடைபெறுகிறது. இந்த போட்டிகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் யூடியூப் சானலில் பார்க்கலாம். போட்டிகள் நாட்டிங்காம், மான்செஸ்டர், லண்டன் ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.

அணி விவரம்: பிரதோஷ் ரஞ்ஜன் பால், என்.ஜெகதீசன், எஸ்.லோகேஷ்வர், பி.சச்சின்,ஆர்.விமல் குமார், ஏ.பத்ரிநாத், எம்.பூபதி வைஷ்ண குமார், மோகித் ஹரிகரண், எஸ்.முகமது அலி, கேடிஏ மாதவ பிரசாத், பி.வித்யூத், பி.விக்னேஷ், எஸ்.லக்சய் ஜெயின், கார்த்திக் மணிகண்டன், ஆர்.சோனு யாதவ், திரிலோக் நாக், அச்யூத், தீரன், டி.டி.லோஷ் ராஜ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x