Published : 05 Jan 2018 10:02 AM
Last Updated : 05 Jan 2018 10:02 AM

சென்னையில் இன்று பிபிஎல் போட்டி

பிரிமீயர் பாட்மிண்டன் லீக் தொடரின் ஆட்டங்கள் இன்று இரவு 7 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது.

பிரிமீயர் பாட்மிண்டன் லீக் (பிபிஎல்) போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை ஸ்மாஷர்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இதன் லீக் ஆட்டங்களின் ஒரு பகுதி குவாஹாட்டி, டெல்லி, லக்னோ ஆகிய நகரங்களில் முடிவடைந்த நிலையில் அடுத்தக்கட்ட லீக் ஆட்டங்கள் இன்று முதல் வரும் 9-ம் தேதி வரை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

இன்று நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு வாரியர்ஸ், வட கிழக்கு வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூரு அணியில் உலகத் தரவரிசையில் முதல் நிலை வீரரான டென்மார்க்கின் விக்டர் அக்சல்சென் இடம் பெற்றுள்ளார்.

இதனால் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையக்கூடும். பெங்களூரு அணி 10 ஆட்டங்களில் 7 வெற்றி, 2 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் வடகிழக்கு வாரியர்ஸ் அணி 15 ஆட்டங்களில் 2 வெற்றி, 10 தோல்விளுடன் 8 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணியில் இந்தியாவின் அஜெய் ஜெயராம், ஷிராக் ஷெட்டி, ஷிவானி ஆகியோருடன் தைவானின் வாங் சூ வெய், கொரியாவின் கிம் ஜி ஜங் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x