Last Updated : 19 Dec, 2017 08:40 AM

 

Published : 19 Dec 2017 08:40 AM
Last Updated : 19 Dec 2017 08:40 AM

தரவரிசையில் ரோஹித் சர்மா 5-வது இடத்துக்கு முன்னேற்றம்

ஐசிசி தரவரிசைப் பட்டியலில் ரோஹித் சர்மா 5-வது இடத்துக்கு முன்னேறினார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் மொகாலியில் இலங்கை அணிக்கு எதிராக இரட்டை சதம் விளாசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 816 புள்ளிகளுடன் 2 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான தொடரில் தொடர் நாயகனாக தேர்வான ஷிகர் தவண் ஒரு இடம் முன்னேறி 14-வது இடத்தை பிடித்துள்ளார். அவர், இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு சதத்துடன் 168 ரன்கள் சேர்த்திருந்தார்.

இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடாத போதிலும் விராட் கோலி 876 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார். டி வில்லியர்ஸ் 872 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். பந்து வீச்சாளர்கள் பட்டியலில் யுவேந்திரா சாஹல் 23 இடங்கள் முன்னேறி 28-வது இடத்தை பிடித்துள்ளார். இலங்கை தொடரில் அவர், 6 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார். மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் 16 இடங்கள் முன்னேறி 56-வது இடத்தில் உள்ளார். ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் 10 இடங்கள் முன்னேறி 45-வது இடத்தை கைப்பற்றி உள்ளார்.

இலங்கை அணியை பொறுத்தவரையில் உபுல் தரங்கா 36-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். அவர், 571 புள்ளிகளுடன் 15 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் உபுல் தரங்கா பெற்றுள்ள அதிக புள்ளிகள் இதுதான். நிரோஷன் திக்வெலா 7 இடங்கள் முன்னேறி 37-வது இடத்தை பிடித்துள்ளார். பந்து வீச்சாளர்களில் சுரங்கா லக்மல் 22-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். அணிகள் தரவரிசையில் எந்தவித மாற்றமும் இல்லை. இந்திய அணி 119 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்க அணி 121 புள்ளிகளுடன் முதலிடத்திலும் நீடிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x