Published : 01 Nov 2017 06:58 PM
Last Updated : 01 Nov 2017 06:58 PM

நெஹ்ரா, ஷ்ரேயஸ் ஐயர் அணியில்: இந்தியா முதலில் பேட்டிங்

டெல்லியில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்திய அணியில் கடைசி போட்டியில் ஆடும் ஆஷிஷ் நெஹ்ரா இடம்பெற்றுள்ளார், அதே போல் ஷ்ரேயஸ் ஐயர் அணியில் உள்ளார், இவர் 4-ம் நிலையில் களமிறங்குவார் என்று கேப்டன் கோலி தெரிவித்தார்.

தானும் பவுலிங்கையே தேர்வு செய்திருப்பேன் என்று கூறிய விராட் கோலி தொடக்கத்திலிருந்தே பனிப்பொழிவு இருப்பதால் இருஅணிகளுக்குமே ஒரே நிலைதான்.

ஆஷிஷ் நெஹ்ரா 19 ஆண்டுகள் வேகப்பந்து வீச்சாளராக ஆடியுள்ளார், இது பெரிய சாதனையே. என்னுடன் ஆடியதில் மிகவும் திறமை வாய்ந்தவர், இளைஞர்களுக்கு உதவுவதில் எப்போதும் விருப்பத்துடன் இருப்பவர். அவர் ஓய்வு பெறுவது வருத்தமளிக்கிறது, என்றார் விராட்.

இந்திய அணி: ரோஹித் சர்மா, தவண், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், தோனி, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், புவனேஷ் குமார், ஆஷிஷ் நெஹ்ரா, யஜ்வேந்திர சாஹல், பும்ரா.

நியூஸிலாந்து அணி: மார்டின் கப்தில், கொலின் மன்ரோ, கேன் வில்லியம்சன், டாம் புரூஸ், டாம் லேதம், ஹென்றி நிகோல்ஸ், கொலின் டி கிராண்ட்ஹோம், சாண்ட்னர், டிம் சவுதி, போல்ட், இஷ் சோதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x