Last Updated : 01 Nov, 2017 10:49 AM

 

Published : 01 Nov 2017 10:49 AM
Last Updated : 01 Nov 2017 10:49 AM

டி20 தரவரிசையில் பும்ரா முதலிடம்

டி 20 பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா ஒரு இடம் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார். அணிகள் தரவரிசையில் நியூஸிலாந்து 125 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. இலங்கை அணிக்கு எதிரான தொடரை வென்ற பாகிஸ்தான் 124 புள்ளிகளுடன் 3 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தையும், வங்கதேச அணிக்கு எதிரான தொடரை வென்ற தென் ஆப்பிரிக்கா இரு இடங்கள் முன்னேறி 6-வது இடத்தையும் பிடித்துள்ளன.

116 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ள இந்திய அணி, நியூஸிலாந்துக்கு எதிரான டி 20 தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றினால் 122 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறலாம்.

இந்த சூழ்நிலை ஏற்பட்டால் நியூஸிலாந்து அணி 114 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு தள்ளப்படும். இந்திய அணி தொடரை 2-1 என வென்றாலும் பாகிஸ்தான் அணி முதலிடத்தை பிடித்துவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x