Published : 26 Jul 2023 09:23 AM
Last Updated : 26 Jul 2023 09:23 AM

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி: இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு

இந்திய அணியின் கோல்கீப்பர்கள் கிருஷ்ணன் பஹதுர் பதக், பி.ஆர்.ஸ்ரீஜேஷ்

புதுடெல்லி: சென்னையில் நடைபெற உள்ள ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லலித் குமார் உபாத்யாய் உள்ளிட்ட 5 முன்கள வீரர்கள் இடம்பெறவில்லை.

ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், கொரியா, சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லலித் குமார் உபாத்யாய், தில்பிரீத் சிங், சிம்ரன்ஜித் சிங், அபிஷேக், பவன் ஆகிய 5 முன்கள வீரர்கள் இடம் பெறவில்லை. இவர்கள் அனைவரும் தற்போது ஸ்பெயினில் நடைபெற சர்வதேச தொடருக்கான இந்திய அணியில் உள்ளனர். ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாக தொடர்கிறார். துணை கேப்டனாக நடுகள வீரர் ஹர்திக் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். புரோ லீக் தொடரில் டிபன்டராக செயல்பட்ட மன்பிரீத் சிங் இம்முறை நடுகளத்தில் செயல்பட உள்ளார்.

அணி விவரம்

கோல்கீப்பர்கள்: பி.ஆர்.ஸ்ரீஜேஷ், கிருஷ்ணன் பஹதுர் பதக்

டிபன்டர்ஸ்: ஜர்மன்பிரீத் சிங், சுமித், ஜுக்ராஜ் சிங், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), வருண் குமார், அமித் ரோஹிதாஸ்.

நடுகளம்: ஹர்திக் சிங், விவேக் சாகர் பிரசாத், மன்பிரீத் சிங், நீலகண்ட சர்மா, ஷம்ஷேர் சிங்.

முன்களம்: ஆகாஷ்தீப் சிங், மன்தீப் சிங், குர்ஜந்த் சிங், சுக்ஜீத் சிங், எஸ். கார்த்தி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x