Published : 06 Nov 2017 10:33 AM
Last Updated : 06 Nov 2017 10:33 AM

கால்பந்தில் இந்தியா தோல்வி

19 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து போட்டியில் இந்திய அணி 0 - 5 என்ற கோல்கணக்கில் சவுதி அரேபியாவிடம் தோற்றது.

சவுதி அரேபியாவில் உள்ள தம்மம் நகரில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பைக்கான கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த டி பிரிவு லீக் ஆட்டத்தில் இந்திய அணி, சவுதி அரேபியாவை எதிர்த்து ஆடியது. இப்போட்டியில் சவுதி அரேபிய அணி 5-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. சவுதி அரேபியா அணிக்காக அல் பிரிகான் 2 கோல்களையும், அப்துல்லா அல்ஹமாதான், பெராஸ் அல் பிரிகான், அல் ஷாராணி ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

இந்திய அணி, தனது அடுத்த லீக் ஆட்டத்தில் இன்று ஏமன் அணியை எதிர்த்து ஆடுகிறது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x