Published : 18 Jun 2023 06:28 AM
Last Updated : 18 Jun 2023 06:28 AM
பர்மிங்காம்: ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நிதானமாக விளையாடி வருகிறது ஆஸ்திரேலிய அணி.
பர்மிங்காமில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 78 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 393 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஜோ ரூட் 152 பந்துகளில், 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 118 ரன்கள்விளாசினார். கைவசம் 2 விக்கெட்கள் இருந்த போதிலும் முதல் நாளிலேயே இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டிக்ளேர் முடிவை எடுத்தது ஆச்சரியமாக இருந்தது.
இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 4ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்தது. டேவிட் வார்னர் 8, உஸ்மான் கவாஜா4 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 2வது நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து விளையாடியது. டேவிட் வார்னர் 9 ரன்னில் ஸ்டூவர்ட் பிராடு பந்தில் போல்டானார். இதையடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுஷேனை டக் அவுட்டில் வெளியேற்றினார் ஸ்டூவர்ட் பிராடு.
தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்திய ஸ்டீவ் ஸ்மித் 59 ரன்களில் 16 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் எல்பிடள்யூ ஆனார். 67 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில்களமிறங்கிய டிராவிஸ் ஹெட் மட்டையை சுழற்றினார். 63 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்த நிலையில் டிராவிஸ் ஹெட், மொயின் அலி பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
தேநீர் இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி 61 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்திருந்தது. உஸ்மான் கவாஜா 84, கேமரூன் கிரீன் 21 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT