Published : 16 Jun 2022 05:56 AM
Last Updated : 16 Jun 2022 05:56 AM

திருப்பதி: ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்த அங்க பிரதட்சண டிக்கெட்கள்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் முதலில் அங்கபிரதட்சணம் செய்யும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

இவர்கள் அங்குள்ள கோயில் குளத்தில் குளித்துவிட்டு, அதிகாலை 2 மணியளவில் ஈர துணியுடன் அனுமதிக்கப்படுவர். அதன் பின்னர் கோயிலுக்குள் அங்க பிரதட்சணம் செய்து, சுவாமியை தரிசிப்பர். தினமும் 750 பக்தர்களுக்கு மட்டுமே இலவசமாக இந்த நேர்த்திக்கடன் சேவை செய்ய அனுமதிக்கப்படுவர்.

ஆனால், இதனையும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியை தேவஸ்தானம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. நேற்று முதல் இது அமலுக்கு வந்தது. இந்த டிக்கெட் நேற்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியான உடன், ஒரு மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்களும் தீர்ந்து விட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x