Published : 19 Mar 2015 01:10 PM
Last Updated : 19 Mar 2015 01:10 PM

வார ராசி பலன் 19-03-2015 முதல் 25-03-2015 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே!

உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 6-ல் ராகுவும் 11-ஆமிடத்தில் புதனும் உலவுவது சிறப்பாகும். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும் நேரமிது. வசீகரச் சக்தி அதிகமாகும். தம்பதியினர் பரஸ்பரம் அனுகூலம் அடைவார்கள். கூட்டுத்தொழிலில் அனுகூலம் உண்டாகும். பெண்களுக்கு உற்சாகம் பெருகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும்.

மாணவர்களது திறமை பளிச்சிடும். போக்குவரத்து, பயணத் துறையினர், ஏற்றுமதி, இறக்குமதி தொழில்துறையினருக்கு வருவாய் அதிகரிக்கும். மக்களாலும் உடன்பிறந்தவர்களாலும் தந்தையாலும் சிறுசிறு பிரச்சினைகள் சூழும். செலவுகள் அதிகரிக்கும். வீண்வம்பு கூடாது. 21-ம் தேதி முதல் செவ்வாய் உங்கள் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதால் உடல்நலம் சீராகும். மதிப்பு உயரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 22, 25.

திசைகள்: தென்மேற்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: புகை நிறம், இளநீலம், பச்சை.

எண்கள்: 4, 5, 6. ‎

பரிகாரம்: ஆதித்ய ஹ்ருதயம் படிக்கவும். தந்தைக்கும் தந்தை வழி உறவினர்களுக்கும் உதவி செய்யவும்.

ரிஷப ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 3-ல் வக்கிர குருவும், 10-ல் புதனும் 11-ல் சூரியனும், செவ்வாயும் கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். தொழில் விருத்தி அடையும். நண்பர்களும் உறவினர்களும் உதவிபுரிவார்கள். மக்களால் நலம் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். பண நடமாட்டம் கூடும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். அரசு உதவி கிடைக்கும். நிறுவன, நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். இயந்திரப் பணிகள் லாபம் தரும்.

எரிபொருட்கள், கட்டடப் பொருட்கள், எலெக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் துறையில் லாபம் வரும். மக்கள் நலனில் கவனம் தேவை. 21-ம் தேதி முதல் வாழ்க்கைத்துணைவராலும் உடன்பிறந்தவர்களாலும் பிரச்னைகள் சூழும். இடமாற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு முன்னேற்றமான பாதை தெரியவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 22, 25.

திசைகள்: வடமேற்கு, தெற்கு, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம், பச்சை, ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 5, 6, 7, 9.

பரிகாரம்: துர்கா கவசம் படிப்பது நல்லது.

மிதுன ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 6-ல் சனியும், 10-ல் சூரியனும் செவ்வாயும் கேதுவும் 11-ல் சுக்கிரனும் உலவுவதால் தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். தர்மப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். அரசு உதவிகளும், சந்திப்புகளும் நிகழும். எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் துறையினர் லாபம் அடைவர்.

கணவன், மனைவி உறவு நிலை திருப்திகரமாக இருந்துவரும். இயந்திரப்பணியாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். வாரப் பின்பகுதியில் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். நிலம், மனை, வீடு, வாகனம் வாங்க சந்தர்ப்பம் உருவாகும். வழக்கில் நல்ல திருப்பத்தைக் காணலாம். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும். சொத்துகளால் ஆதாயம் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 22, 23, 25.

திசைகள்: வடமேற்கு, மேற்கு, தெற்கு, கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, மெரூன், நீலம், சிவப்பு, பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 6, 7, 8, 9.

பரிகாரம்: சக்தி வழிபாடு நலம் கூட்டும்.

கடக ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 8-ல் புதனும் உலவுவதால் வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளால் நலம் பெறுவீர்கள். புதியவர்களது தொடர்பு பயன்படும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். மாணவர்களது நிலை உயரும். போக்குவரத்துத் துறை லாபம் தரும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். அரசுதவி கிடைக்கும். தந்தையால் அனுகூலம் ஏற்படும். 21-ம் தேதி முதல், தொழிலில் அபிவிருத்தி காணலாம். வேலையில்லாதவருக்கு வாய்ப்பு கூடிவரும்.

வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்க வழிபிறக்கும். எதிரிகள் அடங்குவார்கள். 21-ஆம் தேதி முதல் புதன் 9-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. என்றாலும் எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வருவாய் அதிகரிக்கும். பொறியாளர்கள் தங்கள் நிலை உயரப்பெறுவார்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 22, 25.

திசைகள்: வடக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: பச்சை, புகை நிறம்.

எண்கள்: 4, 5.

பரிகாரம்: விநாயகரை வழிபட்ட பின்பு எக்காரியத்திலும் ஈடுபடுவது நல்லது.

சிம்ம ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரனும் 12-ல் வக்கிர குருவும் உலவுவது சிறப்பாகும். தெய்வப் பணிகளிலும் தர்மப் பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். மாதர்களது நிலை உயரும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். சகோதரிகளால் அனுகூலம் உண்டாகும்.

கணவன் மனைவி உறவு நிலை சீராகும். சுப காரியங்கள் நிகழச் சந்தர்ப்பம் உருவாகும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. அரசியல், நிர்வாகத் துறையினர் பொறுப்புடன் செயல்பட்டால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். வீண்வம்பு வேண்டாம். பக்குவமாகப் பேசிப் பழகவும். 21-ம் தேதி முதல் புனிதமான காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். மனத்துக்கினிய சம்பவங்கள் நிகழும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 22 (பிற்பகல்), 25.

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: இளநீலம், பொன் நிறம்.

எண்கள்: 3, 6.

பரிகாரம்: சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது.

கன்னி ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 6-ல் புதனும் 8-ல் சுக்கிரனும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். அறிவாற்றல் பளிச்சிடும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். எழுத்து, பத்திரிகை, கலைத்துறையினர் லாபம் அடைவர். பொதுநலப்பணிகள் ஆக்கம் தரும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். மக்களால் அனுகூலம் உண்டாகும். சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். தொழில் விருத்தி அடையும்.

ஜன்ம ராசியில் ராகு இருப்பதால் அலைச்சல் அதிகமாகும். வாழ்க்கைத் துணைவராலும், கூட்டாளிகளாலும் பிரச்சினைகள் சூழும். பயணத்தில் விழிப்புத் தேவை. நிதானமாகப் பேசிப் பழகுவதன் மூலம் பிறர் அதிருப்திக்கு ஆளாகாமல் தப்பலாம். வாகனங்களை ஓட்டும்போது விழிப்புத் தேவை. வாரப் பின்பகுதியில் பணமோ, பொருளோ கைக்கு வந்து சேரும்.

அதிர்ஷ்டமான தேதி: மார்ச் 25

திசைகள்: வடக்கு, மேற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6, 8.

பரிகாரம்: சூரியன், செவ்வாய், ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x