Last Updated : 09 Jun, 2019 09:50 AM

 

Published : 09 Jun 2019 09:50 AM
Last Updated : 09 Jun 2019 09:50 AM

தீய சக்திகள் விலக பக்கெட் நீரில் உப்பு; பாதம் வைத்தால் பயம் பறந்திடும்!   

தீயசக்திகள் விலகவும் எதிர்மறை எண்ணங்கள் அகலவும் பக்கெட் தண்ணீரில் உப்பு கலந்து, அதில் உங்கள் பாதத்தை வைத்தால் பயமெல்லாம் பறந்திடும். நேர்மறை எண்ணங்கள் உதிக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

எப்போதும் நெகட்டீவ்வாகப் பேசிக்கொண்டிருப்பார்கள் சிலர். மனதில் ஒரு அழுத்தம் இருந்துகொண்டே இருக்கும். எப்போதும் கோபம், எதற்கெடுத்தாலும் கோபம், எல்லார் மீதும் கோபம் என்று எரிந்துவிழுந்துகொண்டே இருப்பார்கள்.

எந்த விஷயமாக இருந்தாலும் மனதில் குழப்பங்கள் போட்டுத்தாக்கும். ‘இது சரியா வராது’ என்று உள்மனம் உரக்கச் சொல்லும். தடைபோடும். இந்தக் குழப்பமும் தடையும் மனதில் பயத்தை உண்டுபண்ணும். தவிப்பும் தயக்கமும் குழப்பமும் பயமும் என வெறுமையாய் வாழ்க்கை நகரும்.

கவலையே வேண்டாம்... இதற்கு எளிய தீர்வு ஒன்று இருக்கிறது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

பக்கெட் அதாவது வாளி ஒன்றில் பாதியளவு தண்ணீர் வைத்துக்கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் கல் உப்பு போடுங்கள். இப்போது உங்கள் இரண்டு கால்களையும் வாளியில் விடுங்கள். கைகளால், கால்களைக் கழுவுங்கள். பாதம், விரல்கள், நகங்கள் என முழங்கால் வரைக் கழுவுங்கள்.

சிறிதுநேரம், இப்படியாக கால்களை உப்பு கலந்த நீரில் வைத்துக்கொண்டு, கண்களை மூடியபடி இருங்கள். இரண்டு கால்களையும் நன்றாகத் தேய்த்துக் கழுவுங்கள். ஒரு பதினைந்து நிமிடங்கள், இப்படியே வைத்திருந்துவிட்டு, கண்களைத் திறந்து பாருங்கள்...கால்கள் வைக்கப்பட்டிருந்த தண்ணீரானது, கருப்பு நிறமாக மாறியிருக்கும். தண்ணீரில் லேசாக நாற்றம் கூட வரலாம். அந்தத் தண்ணீரை எடுத்து கொட்டிவிடுங்கள்.

இப்போது, கால்களை வெளியே எடுத்ததும் ரொம்பவே களைப்பாக உணருவீர்கள். ஆனால், அடுத்தடுத்த நிமிடங்களில், இதுவரை இல்லாத சுறுசுறுப்பு உடலெங்கும் பரவியிருக்கும். எதிர்மறை எண்ணங்களும் மனதில் இருந்த குழப்பங்களும் காணாமல் போயிருக்கும்.

வீண் பயம் விலகியிருக்கும். டென்ஷனோ குழப்பமோ இல்லாமல், எதையும் தெளிவாக அணுகுகிற மனோநிலை வந்திருக்கும். எப்போதும், எவரிடமும் காட்டிவந்த கோபம் முற்றிலுமாகக் காணாது போய், ஒருவித சாந்தம் குடிகொண்டிருக்கும்.

அவ்வளவுதான். இனி கவலையே இல்லை. நேர்மறை எண்ணங்கள் உங்கள் மனதை முழுவதுமாக மையம் கொண்டிருக்கும். பாஸிட்டீவ் எனர்ஜிக்கு இனி உங்களைத்தான் உதாரணமாகச் சொல்லுவார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x