Last Updated : 19 Apr, 2018 11:09 AM

 

Published : 19 Apr 2018 11:09 AM
Last Updated : 19 Apr 2018 11:09 AM

தீர்த்த மகிமை, விருட்ச மகிமை 01: அக்னி தீர்த்தம்

கோ

புர தரிசனம் கோடி நன்மை தரும் என்பதைப் போலவே ஆலயங்களின் தல விருட்சங்களைச் சுற்றிவருவதும் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதும் நன்மை பயக்கும் விஷயங்களாகக் கருதப்படுகின்றன. நகரம், கிராமம், நாட்டு எல்லைகளைக் கடந்து பிரசித்தி பெற்ற தலங்களில் இருக்கும் புண்ணிய தீர்த்தங்கள், தல விருட்சங்களின் சிறப்புகளையும் அவற்றை வழிபடுவதிலும் நீராடுவதிலும் இருக்கும் நன்மைகள் குறித்த பக்தர்களின் நம்பிக்கையை கவனப்படுத்தும் முயற்சியே ‘தீர்த்த மகிமை, விருட்ச மகிமை’.

ராமேஸ்வரம் ராமநாதர் சுவாமி கோயிலில் சமுத்திரமே அக்னி தீர்த்தமாகக் கருதப்படுகிறது. ஆலயத்தின் வெளியே 22 தீர்த்தங்களும் ஆலயத்துக்கு உள்ளே 22 தீர்த்தங்களும் இருப்பதாக ஐதீகம். ஆலயத்தின் முதன்மை தீர்த்தமான அக்னி தீர்த்தத்தில் நீராடிய பிறகே உள்ளே இருக்கும் தீர்த்தங்களில் நீராட வேண்டும் எனும் நியதியை வைத்திருக்கின்றனர்.

கோடி தீர்த்தம், கங்கா, யமுனா, கயா, பிரம்மஹத்தி, மகாலட்சுமி, சாவித்திரி, சேதுமாதவ, சந்திர, சூரிய தீர்த்தங்கள் உட்பட 22 தீர்த்தங்கள் ஆலயத்தினுள் இருக்கின்றன.

அக்னியைத் தணித்த தீர்த்தம்

அக்னி தீர்த்தமான ராமேசுவரம் கடலுக்குப் புராணரீதியிலான விளக்கமும் வழக்கத்தில் இருக்கிறது. சீதையின் கற்பின் சிறப்பை உலகுக்குக் காட்ட ராமன் அவரை அக்னி பிரவேசம் செய்யச் சொல்கிறார். அக்னியில் பிரவேசித்த சீதையின் கற்பு அந்த அக்னியையே சுட்டதாகவும், தன்னுடைய வெப்பத்தைத் தணிக்க ராமேஸ்வரம் கடலில் அக்னி பகவான் மூழ்கியதாகவும் புராணக் கதை கூறுகிறது. அக்னி தீர்த்தம் தோஷ நிவர்த்தி செய்யும் மகிமை கொண்டதாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

தீர்த்த நீராடல்

ஆலயத்தின் உள்ளே இருக்கும் 22 தீர்த்தங்களில் (கிணறுகள்) நீராடுவதன் மூலம் குடும்பத்தில் செல்வம் பெருகும், வாக்குத் திறன் கூடும், உலக நன்மை, கல்விச் செல்வம், வளம், திடமான மனம், பணித் திறன், சுமையான தடைகள் விலகும், பகை விலகும், எதிரிகள் மறைவார்கள், உடல் நலம் கூடும் என்பது உள்ளிட்ட பல நன்மைகள் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x