Last Updated : 10 May, 2018 09:24 AM

 

Published : 10 May 2018 09:24 AM
Last Updated : 10 May 2018 09:24 AM

தண்ணீர்..! தண்ணீர்..! பூமி தானம் செய்து தாகம் தீர்த்த தம்பதி

பொ

து மக்களின் தாகத்தை தீர்த்து வைத்திருக்கிறது ஒரு தம்பதியின் மணிவிழா.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த மங்கலம்பேட்டையில் அரிசி மண்டி நடத்திவரும் தாமோதரன் - ஜெயந்தி தம்பதியினர், தங்களது 60-வது மணிவிழாவை கடந்த 2016-ம் ஆண்டு ஏப். 19-ல் கொண்டாடினர். இதையொட்டி நல்லது செய்ய வேண்டுமே என யோசித்தவருக்கு உயிர்நீரான குடிநீரை பகுதி மக்களுக்கு கொடுக்க முடிவு செய்தார்.

உடனே, தனது 5 சென்ட் நிலத்தில் உள்ள ஆழ்துளைக் கிணற்றுடன் கூடிய பூமியை மங்கலம்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்துக்கு தானமாக வழங்கினார். பூர்வாங்கப் பணிகள் முடிந்து, அவர் அளித்த ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மங்கலம்பேட்டை மக்களுக்கு கடந்த 19-ம் தேதி முதல் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது.

தாமோதரனை நேரில் சந்தித்தோம், “ வெயிலில் பெண்கள் காலிக் குடங்களுடன் அலை வது மனதை வாட்டியது. குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண விரும்பினேன். இதனால் 10 குதிரைத் திறன் கொண்ட ஆழ்துளைக் கிணற்றையும் அது அமைந்துள்ள 5 சென்ட் நிலத்தையும் பேரூராட்சி நிர்வாகத்திடம் வழங்கினேன். தற்போது பொது மக்கள் தண்ணீர் பிடிக்கத் தொடங்கியுள்ளனர். இது எனது குடும்பத்தினருக்கு மிகுந்த மனநிறைவை அளித்துள்ளது’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.

மங்கலம்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் முரு கன் கூறும்போது, “சுமார் 10 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட மங்கலம்பேட்டை யில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, விஜயமாநகரத்தில் இருந்து டிராக்டர் மூலம் தண்ணீர் பிடித்து விநியோகித்து வந்தோம். தற்போது தாமோதரன் வழங்கிய நிலத் தின் தண்ணீரை ஆய்வு செய்ததில் குடிப்பதற்கு ஏற்ற நீர் என உறுதியானது. அதிக அளவில் தண்ணீரும் கிடைக்கிறது. இதனால் தட்டுப்பாடு குறையும்’’என்றார்.

தாங்கள் பருகும் ஒவ்வொரு சொட்டுத் தண்ணீருக்கும் நன்றி சொல்கிறார்கள் மங்கலம்பேட்டை மக்கள். தாகத்தில் மக்களின் தொண்டைகள் நனைய, தாமோதரன் தம்பதியரோ ஆனந்தக் கண்ணீரில் நனை கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x