Published : 11 Feb 2019 05:16 PM
Last Updated : 11 Feb 2019 05:16 PM
ஷியா முஸ்லிம் என்பதால் சவுதியில் 6 வயது சிறுவன் ஒருவன் தனது தாய்யின் முன்னிலை கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ” சகாரியா அல் ஜாபஎ என்ற 6 வயது சிறுவன் தனது தாயுடன் மெதினாவில் உள்ள புனித தளத்திற்கு செல்வதற்காக தனது தாயுடன் யாத்திரைகைக்கு வந்திருக்கிறார். அப்போது ட்ரைவர் ஒருவர் அவர்களிடம் நீங்கள் ஷியா முஸ்லிம்மா என்று கேட்டுருக்கிறார்... அதற்கு சகாரியாவின் தாய் ஆம் என்று கூற, டாக்ஸியின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து நீ இஸ்லாமின் தவறான வேரிலிருந்து வந்தவன் என்று கூறி சாரியாவின் தொண்டையில் குத்தி கொலை செய்திருக்கிறார். இதனை கண்ட சகாரியாவின் தாய் மயங்கி விழுந்திருகிறார்” என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சகாரியாவின் கொலைக்கு நியாயம் வேண்டி, அந்நாட்டு முற்போக்காளர்களில் போர்க் கொடி தூக்கி உள்ளனர்.
சமூக வலைதளங்களிலும் #JusticeforZakaria என்று பதிவிட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT