Published : 13 Feb 2016 10:54 AM
Last Updated : 13 Feb 2016 10:54 AM

அதிர்ச்சி அளிக்கிறது

மெல்லக் கற்கும் மாணவர்களுக்காகத் தனது அயராத உழைப்பின் மூலம் உருவாக்கிய குறுந்தகட்டினை, இலவசமாக வெளியிட்ட அரசு ஆசிரியையின் செயலினைச் சில நாட்களுக்கு முன்னர் ‘தி இந்து’வில் படித்தபோது பெருமையாக இருந்தது. ஆனால், தற்போது விருதுநகர் பாறைப்பட்டி அரசுப் பள்ளியில் 100% தேர்ச்சி பெறுவதற்காக மெல்லப் படிக்கும் மாணவர்களைக் கட்டாயமாக வெளியேற்றிய நிகழ்வை அறிந்தபோது அதிர்ச்சி அளித்தது. ‘உன்னால் முடியும்’ என்ற ஒற்றை வார்த்தையை ஒரு மாணவன் தனது ஆசிரியரிடமிருந்து கேட்கப்பெற்றால், அவனுடைய தன்னம்பிக்கை பல மடங்கு அதிகரிக்கும். குரு தனது கடமையை உணர்ந்து பணியாற்ற வேண்டுமே தவிர, பொறுப்பைத் தட்டிக்கழித்தல் கூடாது.

- சொ.சந்தனக்குமார், சிவகிரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x