Published : 08 Oct 2015 11:08 AM
Last Updated : 08 Oct 2015 11:08 AM

பாவம் மாடுகள் மட்டுமல்ல!

கூறவேண்டிய கருத்துகளை, ‘பாவம் மாடுகள்... அவற்றை விட்டுவிடுங்கள்' என்ற தலையங்கத்தின் மூலமாக நேர்மையாகவும் துணிவுடனும் கூறியிருக்கிறீர்கள்.வன்முறையைத் தவிர்த்து அமைதி முறையில் விடுதலையை வாங்கித் தந்த காந்தி இன்று இருந்தால் நிச்சயமாக ரத்தக்கண்ணீர் வடிப்பார்.

வேண்டுமென்றே பரப்பப்பட்ட வதந்திகளின் அடிப்படையில், மதவெறி கொண்ட ஒரு கும்பல், எள்ளளவும் மனிதாபிமானம் இல்லாமல் அப்பாவி மனிதனின் உயிரைப் பறித்திருக்கிறது. இந்த ஈவு இரக்கமற்ற செயலும் அரசியலாக்கப்படுகிறது. மதத்தின் பெயரால் மக்களிடையே பிரிவினைகளை உண்டாக்கி, வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு நாட்டில் குழப்பத்தை உண்டாக்க முயலும் தீயசக்திகளின் செயல்தான் இது. ஆட்சியாளர்கள் மவுனம் கலைத்து, நாட்டின் மதச்சார்பற்ற தன்மையின் புனிதம் காத்திட, தேவையான நடவடிக்கைகளைத் துணிவுடன் எடுக்க வேண்டும். இல்லையேல், பாவம்… மாடுகள் மட்டுமல்ல, அப்பாவி மக்களும்தான்!

- தா. சாமுவேல் லாரன்ஸ், மதுரை.

***

நிதர்சனமான வார்த்தைகள்

`பாவம் மாடுகள்... அவற்றை விட்டுவிடுங்கள்’ தலையங்கம் சுட்டிக்காட்டுவது போலப் பசுங்கன்று விழுந்த இடத்தில் ஆட்டுக்குட்டி விழுந்திருந்தாலும் முஹம்மது ஜகி அப்படித்தான் நடந்துகொண்டிருப்பார் என்பது தெளிவு. அதேசமயம், பிரியாணி சாப்பிடும்போது அவர் ஆட்டையோ, மாட்டையோ நினைத்துக்கொண்டிருக்க மாட்டார். அது தேவையும் இல்லை. - நிதர்சனமான வார்த்தைகள்.தெளிவான பார்வை. அவ்வை சண்முகி படத்தில் சொல்வதுபோல் ‘’கறிக்காக அவன் கொன்ற மாடுகளை விட, தோலுக்காக உங்களால் கொல்லப்பட்ட மாடுகளே அதிகம்."

- ஆலமரம், ’ தி இந்து’ இணையதளத்தில்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x