Published : 25 Sep 2015 10:51 AM
Last Updated : 25 Sep 2015 10:51 AM

அவமானங்களே உரம்

எஸ். ராமகிருஷ்ணனின் ‘வீடில்லாப் புத்தகங்கள்’ தொடர் பல புத்தகங்களை நம் புத்தக அலமாரிக்குக் கொண்டுவந்து சேர்க்கும் அற்புதமான தொடர். ‘கனவில் துரத்தும் புத்தகம்’ எனும் தலைப்பில் அவர் எழுதிய பதிவு மனதைத் தொட்டது. அவமானங்களைக் கண்டு பின்வாங்குவதைவிட அதையே உரமாக்கிக்கொண்டால், வெற்றியின் உச்சத்தைத் தொடலாம் என்பதற்கு கருப்பினப் பெண் மேரி மெக்லி யோட் சரியான உதாரணம்.

அன்று நிறம் சார்ந்து இருந்த ஒதுக்குதல்கள் இன்று இனம் சார்ந்தும் பணம் சார்ந்தும் இருப்பதை யாரும் மறுத்து விட முடியாது. எதிர்ப்புகளைக் கண்டு மிரண்டு ஓடிவிடாமல் நமக்குக் கிடைக்கும் சிறு வாய்ப்பைப் பயன்படுத்தினால்கூட `பெத்யூன் குக்மேன் கல்லூரி'யை மேரி மெக்லி யோட் உருவாக்கியதைப் போல நாமும் பிறருக்குப் பயன்படும் செயல்களைச் செய்ய முடியும் என்பதை இப்பதிவு சொன்னது.

- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x