Published : 03 Sep 2015 10:44 AM
Last Updated : 03 Sep 2015 10:44 AM

நம் நதி... நம் பத்திரிகை!

‘தி இந்து’ நாளிதழ் ஆரம்பித்த நாள் முதல் தினமும் வாசித்து, இன்புற்று, பயனடைந்துவரும் லட்சக்கணக்கான வாசகர்களுள் நானும் ஒருவன்.

நான் ஆய்ந்தவரையில் ‘தி இந்து’ நாளிதழ் தினமும் முக்கியமாக முன்னெடுப்பது, இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தின் இன்றியமையாத தேவைகளான 1. மதுவிலக்கு 2. ஆக்கிரமிப்பு, கழிவுநீர் கலப்பு, மணல் கொள்ளை இவற்றிலிருந்து நீராதாரங்களைக் காத்தல் 3. அருகிவரும் மனித நேயத்தை மேம்படச் செய்தல்… இந்தச் செய்திகளின் வெளிப்பாடு. மதுவிலக்குக்கு ஆதரவாகப் பெண்கள் மற்றும் மாணவர்கள் நடத்தும் அறப் போராட்டங்கள், காவிரி, பாலாறு, தாமிரபரணி நதிகளின் இன்றைய மோசமான நிலைமை, அதைச் சரிசெய்ய மக்களிடம் ஏற்படுத்திய விழிப்புணர்வு என்று சமூகத்தின்பால் ‘தி இந்து’ நாளிதழ் கொண்டுள்ள அக்கறையின் பட்டியல் மேலும் நீள்கிறது.

எல்லாவற்றையும்விட, ஏழை எளிய மாணவர்கள் வறுமையின் காரணமாக மேற்படிப்புக்குச் செல்ல இயலாமல் இருப்பதை வெளிக்கொணர்ந்து, ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உறங்கிக் கிடக்கும் மனித நேயத்தைத் தட்டியெழுப்பி, அதன் மூலம் பல ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவி செய்த பெருமை ‘தி இந்து’வுக்கு உண்டு. இதற்குச் சமீபத்திய உதாரணம், புதுக்கோட்டை மாவட்டம், சுண்டாங்கிவலசு கிராமத்தைச் சேர்ந்த எம்பிபிஎஸ் பயனாளி தினேஷ் குமார். இந்த அரும்பணிகள் தொடரட்டும்… மீண்டும்

‘தி இந்து’வுக்கு நன்றி!

- அ. பட்டவராயன்,திருச்செந்தூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x