Published : 26 Aug 2015 10:37 AM
Last Updated : 26 Aug 2015 10:37 AM

உணர்வோடு ஒன்றியது மொழி

ஆட்சிமொழி தொடர்பாக ஆழி செந்தில்நாதனின் எதிர்வினைக் கட்டுரை படித்தேன். அவர் சொல்வது போல 22 மொழிகளும் ஆட்சிமொழி யாவது எனில், 22 மொழிகளையும் போட்டுக் குழப்பிக்கொள்வதல்ல.

அந்தந்த மாநில மக்கள் பேசும் மொழியில், அந்தந்த மாநில மக்களோடு தொடர்புகொள்வது என்றே பொருள். இலங்கையிலும் சிங்கப்பூரிலும் கனடாவிலும்கூட ஒன்றுக்கு மேற்பட்டமொழிகள் ஒரே சமயத்தில் ஆட்சிமொழியாக உள்ளன. ஆழி செந்தில்நாதனின் கட்டுரையில் உண்மை நிலவரம் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டிருந்தது. மொழி என்பது வெறும் பேச்சு வழக்குக்கான கருவி மட்டுமே அல்ல;

அது உணர்வோடு ஒன்றியது. ஆளும் பொறுப்பில் உள்ளவர்கள் இதை உணர்ந்துகொள்ள மறுப்பதுதான் எல்லா சிக்கலுக்கும் அடிப்படை.

- கே.எஸ்.முகமத் ஷூஐப், காயல்பட்டினம்.

***

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆங்கிலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, அன்றைய எதிர்க் கட்சித் தலைவர் காமராசர்

‘‘இங்கிலீசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வேண்டாம்னு சொன்னால், இந்தி அங்கே வந்து குந்திக்கும்’’ என்று தனக்கே உரிய பாணியில் கூறினார். மொழிக்காகப் போராடிய… போராடும் ஒரே இனம் தமிழினம். மொழியுணர்வு மிக்க போராட்டங்கள்தான் விழிப்புணர்வுமிக்க மக்களை உருவாக்கியது.

அந்த மக்கள்தான் புதிய வரலாற்றையும் உருவாக்கினர். இன்றைய இளைஞர்களுக்கு தமிழில் நாட்டமில்லை, மொழியுரிமையை ஏற்றிப் பிடிக்கவில்லை என்பதை ஏற்க முடியாது. இணையத்தில் பன்மடங்கு வேகமாகப் பரவும் தமிழே இதற்குச் சாட்சி!

- மணிகண்டபிரபு,திருப்பூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x