Published : 29 Dec 2022 07:55 AM
Last Updated : 29 Dec 2022 07:55 AM

ப்ரீமியம்
கேரளத்தின் குப்பைத் தொட்டியா தமிழகம்?

கேரளத்திலிருந்து ஆபத்தான மருத்துவக் கழிவுகள், மின்னணுக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் கொட்டப்படும் விவகாரம் பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் நீண்டுகொண்டேயிருக்கிறது. இதை எதிர்த்து தமிழகத்தின் எல்லை மாவட்ட மக்கள் போராட்டங்களில் இறங்கினாலும்கூட, அதற்கெல்லாம் செவிசாய்க்காமல் கேரள அரசும் அங்குள்ள உள்ளாட்சி அமைப்புகளும் அதை உதாசீனப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

கேரள எல்லையை ஒட்டிய பகுதிகளில் இப்பிரச்சினையை அதிகம் எதிர்கொள்பவை நீலகிரி, கோவை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள்தாம். ஆள் நடமாட்டம் அற்ற தமிழக நிலப்பகுதி, வனப்பகுதிகளில் கேரள வாகனங்கள் கழிவுகளைக் கொட்டிச் செல்வதும், கழிவுகளை ஏற்றிவந்த வாகனங்களைப் பொதுமக்கள் பிடித்துவைப்பதும் தமிழக எல்லை மாவட்டங்களில் வாடிக்கையாகிவிட்டது. தென் மண்டலத்தில் கழிவுகளை ஏற்றிவரும் வாகனங்களைக் கண்காணிப்பதற்காகச் சிறப்புப் படையை அமைத்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். தமிழக எல்லையில் ஆபத்தான கழிவுகளைக் கொட்ட வேண்டாம் என்று கேரள உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடுமாறு தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கேரள மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்குக் கடிதமும் எழுதியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x