Published : 07 Aug 2021 06:09 AM
Last Updated : 07 Aug 2021 06:09 AM

சிவகாசி, புதுக்கோட்டையில் புத்தகக்காட்சி

சிவகாசி, புதுக்கோட்டையில் புத்தகக்காட்சி

சிவகாசி: சிவன் கோயில் தெற்கு வாசல் எதிரிலுள்ள பாரதி நூல் நிலையத்தில் ஆகஸ்ட் 31 வரை புத்தகக்காட்சி நடக்கிறது. ‘இந்து தமிழ் திசை’ வெளியீடுகள் அனைத்தும் இங்கே கிடைக்கும். 10% தள்ளுபடி உண்டு. தொடர்புக்கு: 94426 65654

புதுக்கோட்டை: மேல ராஜவீதியிலுள்ள மூகாம்பிகை காம்ப்ளக்ஸில், ‘இந்து தமிழ்’ நாளிதழும் சக்ஸஸ் புக் ஷாப்பும் இணைந்து நடத்தும் புத்தகக்காட்சி செப்டம்பர் 5 வரை நடக்கிறது. ‘இந்து தமிழ் திசை’ வெளியீடுகள் அனைத்தும் இங்கே கிடைக்கும். 15% வரை தள்ளுபடி உண்டு. தொடர்புக்கு: 98420 18544

நீலத்தின் நல்கை

பட்டியலின மக்களின் வாழ்க்கை, போராட்டங்கள், கலை, கலாச்சாரம் போன்றவற்றை ஆய்வுசெய்பவர்களுக்கு என்று ‘நீலம்’ பதிப்பகம் ஒரு நிதி நல்கையை (Fellowship) அறிவித்திருக்கிறது. இதன் மதிப்பு ரூ.75 ஆயிரம். ஆண்டுதோறும் 5 ஆய்வாளர்களுக்கு இந்த நல்கை வழங்கப்படும். ஆய்வுகள் முடிந்த பின் ‘நீலம்’ பதிப்பகமே அவற்றைப் புத்தகங்களாக வெளியிடும். விண்ணப்பிப்பவர்கள் பட்டியலினத்தவர்களாகவும் பழங்குடியினத்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது விதிமுறைகளுள் ஒன்று. விண்ணப்பிக்க editor.neelam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொள்ளலாம். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.08.21.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x