Published : 17 Apr 2021 05:43 AM
Last Updated : 17 Apr 2021 05:43 AM
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான நரேஷ் குப்தா, தமிழகத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் உறுப்பினர் எனப் பல முக்கியமான பதவிகளை வகித்தவர். அவர் எழுதிய ‘தி பாத் டு சால்வேஷன்’ எனும் புத்தகம் ‘முக்திக்கு வழி’ என்ற பெயரில் இப்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தியத் தத்துவச் சிந்தனைகளில் புலமை கொண்ட ஆளுமைகளின் கருத்துகளை எளிமையான முறையில் இந்தப் புத்தகத்தில் விவரித்திருக்கிறார். பல்லாயிரம் வருட வயது கொண்ட சிந்தனைகள் புனித நூல்களில் எப்படியெல்லாம் கையாளப்பட்டிருக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். இந்து மதத்தின் பரிணாம வளர்ச்சி, இந்தியத் தத்துவம், வாழ்க்கை பற்றிய இந்து மத்தின் கண்ணோட்டம், சமயங்களுக்கும் சாதிகளுக்கும் இடையேயான முரண்பாடுகள் எனப் புத்தகம் விரிகிறது.
முக்திக்கு வழி
நரேஷ் குப்தா
தமிழில்: கே.சீனிவாசன், வி.மோகன்
சிபிஆர் பப்ளிகேஷன்ஸ்
தொடர்புக்கு: 044 48529990
விலை: ரூ.150
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT