Published : 27 Jan 2018 10:20 AM
Last Updated : 27 Jan 2018 10:20 AM

தொடுகறி: மணல்வீடு’ ஹரிகிருஷ்ணனுக்கு பாஷா பரிஷத் யுவபுரஸ்கார்

அம்மா

வந்திருக்கிறாள்…

மிழின் நவீன இலக்கியச் சாதனைகளை மக்கள் பதிப்பாக வெளியிட்டுவரும் ‘குடும்ப நாவல்’ பத்திரிகை, தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவலைக் கொண்டுவந்திருக்கிறது. பொங்கல் சிறப்பிதழாக வெளிவந்திருக்கும் இந்தப் பதிப்பின் விலை ரூ.40. ஏற்கெனவே ஜி.நாகராஜன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, பூமணி, ஹெப்ஸிபா ஜேசுதாசன், ப.சிங்காரம் ஆகியோரின் நாவல்களையும் இப்படி மலிவு விலையில் வெளியிட்டிருக்கிறார் ‘குடும்ப நாவல்’ ஆசிரியரான ஜி.அசோகன். மலிவுப் பதிப்பில் அடுத்த நாவல் என்னவென்று இப்போதே எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

முத்துலிங்கம்-60

வீனத் தமிழ் இலக்கியத்தின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான அ.முத்துலிங்கத்தின் இலக்கியப் பயணம் தொடங்கி 60 ஆண்டுகளாகின்றன. இதைக் கொண்டாடும் விதமாக, வருகின்ற ஏப்.12-ல் கனடாவின் ஒன்டோரியா நகரில் உள்ள தமிழ் இசைக் கலா மன்றத்தில் ‘எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60’ நிகழ்வுக்குத் திடமிட்டிருக்கிறது கனடிய தமிழ்ச் சமூகம். வாழ்த்துகள்!

‘மணல்வீடு’ ஹரிகிருஷ்ணனுக்கு பாஷா பரிஷத் யுவபுரஸ்கார்

ந்திய மொழிகளில் எழுதும் சிறந்த எழுத்தாளர்களில் நால்வருக்கும் இளம் எழுத்தாளர்கள் நால்வருக்கும் ஆண்டுதோறும் விருதுகளை வழங்கிக் கௌரவித்துவருகிறது பாரதிய பாஷா பரிஷத். இந்த ஆண்டுக்கான பாஷா பரிஷத் யுவபுரஸ்கார் விருதுக்கு ‘மணல்வீடு’ இதழின் ஆசிரியரான மு.ஹரிகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரது மூன்று சிறுகதைத் தொகுப்புகளுக்காகவும் தவசிக் கருப்பசாமி என்ற புனைபெயரில் எழுதிய கவிதைத் தொகுப்புகளுக்காகவும் இவ்விருது வழங்கப்படுகிறது. ‘மணல்வீடு’ சிற்றிதழ், தொல்கலைகளுக்கான ‘களரி’ அமைப்பு என எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் கூத்து வாத்தியார் மார்ச் 21 அன்று கொல்கத்தாவில் நடைபெறவிருக்கும் விழாவில் விருதைப் பெறுகிறார்.

ஒரு செல்ல நாயின் கதை

டூ

டூ. ஞா.சிவகாமி எழுதியிருக்கும் சின்ன புத்தகம். அது எடுத்துக்கொண்டிருக்கும் பொருளால் முக்கியத்துவம் பெறுகிறது. தலைமைச் செயலகத்தில், பிரிவு அலுவலகராகப் பணிபுரியும் ஞா.சிவகாமி, தான் வளர்த்த செல்ல நாய் டூடூவின் நினைவாகக் கொண்டுவந்திருக்கும் புத்தகம் இது. டூடூ என்கிற பெயரை ஏன் சூட்டினார், டூடூவுக்குப் பிடித்தமான விஷயங்கள், அதை கோபப்படுத்திய விஷயங்கள், அதை எப்படியெல்லாம் அக்கறையோடு பராமரித்தார், கடைசியில் அதை இழந்து தவித்த சோகம், அடுத்து வளர்க்கும் செல்லக்குட்டி என்று தனது அனுபவங்களைச் சொல்லியிருக்கிறார். செல்லத்துக்கு எழுதிய கவிதைகளும் இதில் உள்ளடக்கம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x