சுதந்திரா பரத்வாஜை 14 நாட்கள் காவலில் அடைக்க உத்தரவு

சுதந்திரா பரத்வாஜை 14 நாட்கள் காவலில் அடைக்க உத்தரவு
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி ஜந்​தர் மந்​தர் தாக்​குதல் வழக்​கில் கைதான சுதந்திரா பரத்​வாஜை 14 நாட்​கள் நீதி​மன்ற காவலில் அடைக்க டெல்லி நீதி​மன்​றம் நேற்று உத்​தர​விட்​டது. நீட் வினாத்​தாள் கசிவு போராட்​டத்​தின்​போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் தந்தையை தாக்​கிய சுதந்​திரா பரத்​வாஜை கைது செய்​யக் கோரி கரப்​பான்​பூச்சி ஜனதா கட்​சி​யினர் டெல்​லி​யில் போராட்​டம் நடத்தினர். கடந்த 5-ம் தேதி சுதந்​திரா பரத்​வாஜ் கைது செய்யப்பட்​டார்.

இதைத் தொடர்ந்து டெல்லி கர்​கர்​டூமா நீதி​மன்ற வளாகத்​தில் உள்ள நீதிப​தி​யின் வீட்​டில் பரத்​வாஜ் நேற்று ஆஜர்​படுத்​தப்​பட்​டார். அப்​போது அவரை 14 நாட்​கள் நீதி​மன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிப​தி உத்​தர​விட்​டார்​.

சுதந்திரா பரத்வாஜை 14 நாட்கள் காவலில் அடைக்க உத்தரவு
“வதந்திகளும், பொய்களும்...” - முதல்வர் விஜய் பதிலுரை மீது கனிமொழி எம்.பி விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in