Published : 29 Apr 2023 06:53 AM
Last Updated : 29 Apr 2023 06:53 AM

அத்தீக் கொல்லப்பட்ட பின் எடுத்த நடவடிக்கை என்ன? - அறிக்கை கேட்கிறது உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: அத்தீக் அகமது, அவரது சகோதரர் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட பின்பு எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேச வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் அத்தீக் அகமதுவின் மகன் ஆசாத் என்கவுன்ட்டரில் கடந்த 13-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். 2 நாட்களுக்குப்பின், உமேஷ் பால் கடத்தல் வழக்கில், அத்தீக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோரை 3 பேர் கும்பல் சுட்டுக் கொன்றது.

இந்நிலையில் உ.பி.யில் 2017-ம் ஆண்டு முதல் 183 என்கவுன்ட்டர்கள் நடந்துள்ளது குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் மனுத்தாக்கல் செய்தார்.

இது நீதிபதிகள் ரவீந்திர பாட் மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அத்தீக் மற்றும் அவரது சகோதரர் சுட்டுக்கொல்லப்பட்ட பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை உத்தர பிரதேச அரசு அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x